districts

img

மகரிஷி பள்ளி மாணவர்கள் உலக சாதனை

கிருஷ்ணகிரி, பிப். 18- கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளியில் வெள்ளிக்கிழமை (பிப். 17) 40ஆவது ஆண்டு விழாவும், மாணவர்களின் உலக  சாதனை நிகழ்ச்சியும் தலைவர் அஜய் பிரகாஷ் ஸ்ரீ வத்சவா தலைமையில் நடைபெற்றது. இதில் சென்னை மகரிஷி பள்ளி குழுமங்களின் இயக்குனர்  நீலகண்ட பிள்ளை, ஓசூர் பள்ளி செயலாளர்கள் லோகநாதன்,  வெங்கட்ரமணா, சிறப்பு விருந்தினர்களாக கலந்து  கொண்டனர். முதல்வர் ஷைலா, துணை முதல்வர்கள் ஸ்ரீதனா ஹரிப்ரியா, ரவிக்குமார், சுரேஷ் ஒருங்கிணைத்தனர். 638 மாணவர்ககளின் தமிழ் கும்மி நாட்டுப்புற நடனம், 959 பேர் மேல்நாட்டு இசையில் தமிழ் நாட்டுப்புற நடனம்,  1,086 பேர் கர்நாடகா நாட்டுப்புற நடனம், 809 பேர் குஜராத் தாண்டியா நாட்டுப்புற நடனம், 441 பேர் நடித்த நாடகம் என 3,933 மாணவ மாணவிகள் கலந்து கொண்ட 5 உலக சாதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆய்வாளர்கள் எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், பாவனா, அர்ச்சனா, ஏசியன் ரெக்காட்ஸ் அகாடமி செந்தில்குமார், இந்தியா ரெக்காட்ஸ் அகாடமி ஜெகநாதன், தமிழன் புக் ஆப்  ரெக்கார்ட்ஸ் நாகஜோதி ஆகியோர் மாணவ மாணவிகளின் 5 சாதனைகளை அங்கீகரித்து சான்றிதழ், பரிசு, கேடயங்கள் வழங்கினர்.

;