கிருஷ்ணகிரி, ஏப். 10 - சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த சின்ன ஆதரள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கலையரசன் (வயது 27). கூலித் தொழிலாளியான இவர் 2019 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். மேலும், சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் வழக்கு பதிந்து கலையரசனை கைது செய்தனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது. அரசு தரப்பில் உமாதேவி மங்கலமேரி வாதாடினார். விசாரணை முடிவில், சிறுமியை கடத்தியதற்காக கலையரசனுக்கு 10 ஆண்டு சிறை, 1,000 ரூபாய் அபரா தமும், குழந்தை திருமணத்திற்கு 2 ஆண்டு சிறை 2,500 ரூபாய் அபராதம் என 12 ஆண்டு சிறை மற்றும் 4500 ரூபாய் அபராதம் விதித்தது நீதிபதி லதா தீர்ப்பளித்தார்.