districts

img

ஓசூர், சூளகிரியில் ஆலங்கட்டி மழையால் காய்கறி, மலர் பசுமைக் குடில்கள் சேதம் காப்பீடு செய்தும் பலனில்லை என விவசாயிகள் வேதனை

கிருஷ்ணகிரி, மார்ச் 18- கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி பகுதிகளில் சூறைக்காற்று, ஆலங்கட்டியுடன் பெய்த மழையால் 100 ஏக்கர் பரப்பளவில் பசுமைக் குடில்கள் சேதமாகி உள்ளது.  இதனால் ரூ.5 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவில் பசுமைக் குடில் அமைத்து விவசாயிகள் காய்கறிகள், மலர் சாகுபடி செய்து வருகின்றனர்.  ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் மற்றும் கோடைக் காலங்களில் சூறாவளி காற்றுடன் பெய்யும் மழை யால் பசுமைக்குடில்கள் அதிகளவில் சேதமடைந்து வருவது தொடர் கதையாக உள்ளது. இந்நிலையில் கடந்த வியாழக் கிழமை ஓசூர், சூளகிரி, கெலமங்கலம் பகுதிகளில் அதிவேக காற்று, ஆலங் கட்டியுடன் கூடிய மழை பெய்ததால், பசுமைக்குடில்களின் மேற்கூரைகள் சேதமடைந்தன. அதேபோல் காய்கறி கள், மலர் செடிகளும் பாதிக்கப்பட்டுள் ளது. இந்நிலையில், சேதங்களை தவிர்க்க காப்பீடு செய்தும் பயன் இல்லை என விவசாயிகள் தெரிவித் துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறு கையில், பசுமைக்குடில்கள் காப்பீடு செய்து வைத்திருந்தாலும், போதிய இழப்பீடு கிடைப்பதில்லை. எனவே, தோட்டக்கலைத் துறையினர் உரிய ஆய்வு செய்து, இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அண்டை மாநிலமான கர்நாடகாவில் பசுமைக்குடில் அமைக்க பயன்படுத்தப்படும் பாலிதீன் மேற்கூரைகள் 3 ஆண்டுகளுக்கு ஒரு  முறை விவசாயிகளுக்கு 100 விழுக்காடு  மானியத்தில் வழங்கி, ஊக்கப்படுத்தி வருகின்றனர். அதேபோல், தமிழ்நாட்டிலும் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

;