districts

img

கண்டிச்சங்காடு கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தருக! நெல்லை விற்க முடியாததால் விவசாயிகள் வேதனை

அறந்தாங்கி, ஜன.29 - புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி தாலுகா கண்டிச்சங்காடு கிரா மத்தில் அரசு நெல்  கொள்முதல் நிலையம் அமைத்து தர அப்பகுதி விவ சாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். கண்டிச்சங்காடு, ஏகனிவயல், திரு வாங்கூர், ஏகபெருமாளூர், வெள்ளாட்டு மங்களம், சந்தமனை/தேடாக்கி, புறங்காடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5  ஆயிரம் ஏக்கர் சம்பா, நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்சமயம் அறுவடைக்கு தயாராக உள்ளது. மழை உள்ளிட்ட பேரிடர்களால்  பாதிக்கப்பட்டு, மீத முள்ள பயிர்கள் அறுவடை செய்யப் பட்டு கொண்டிருக்கும் நெல்மணிகள் சுமார் 3 ஆயிரம் மூட்டைகளை அரசு  கொள்முதல் செய்யும் என்று நம்பி,  20 நாட்களுக்கு மேலாக நெல் மூட்டை களுடன் அரசு நெல் கொள்முதல் நிலை யத்தில் காத்திருக்கிறார்கள். உடனடியாக கொள்முதல் நிலை யம் அமைத்து அரசு கொள்முதல் செய்ய  வேண்டும் என்று விவசாயிகள் கோ ரிக்கை வைத்திருக்கிறார்கள். நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியு றுத்தி பலமுறை அதிகாரிகளிடம் கோ ரிக்கை மனு கொடுத்தும், இதுவரை எந்த  நடவடிக்கையும் இல்லை.

அதனால், விவசாயிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டி ருக்கிறது.  விவசாயிகளின் இன்னலை போக்க  அறந்தாங்கி தாலுகா, கண்டிச்சங் காடு, அத்தாணி, கம்மங்காடு, மணமேல் குடி தாலுகா இடையாத்திமங்கலம், நிலையூர், தினையாகுடி, இடையாத் தூர், ஆவுடையார்கோவில் தாலுகா ஆலடிக்காடு ஆகிய பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழக அரசிற்கும் புதுக்கோட்டை மாவட்டம் கல்லணை கால்வாய் பாசனதாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கத்தினர் கோ ரிக்கை வைத்திருக்கின்றனர். இதைப்போல் ஏகனிவயல், ஏகப் பெருமாளூர் ஊராட்சி மற்றும் அதனை  சுற்றியுள்ள கிராம பகுதிகளில் உள்ள  விவசாயிகள் அவர்கள் விளைவித்த நெல்லை அப்பகுதியில் கண்டிச்சங் காடு கிராமத்தில் உள்ள 209 ஆம் எண்  அரசு நேரடி கொள்முதல் நிலையம் மூல மாக நெல்மணிகளை விற்பனை செய்து  வந்தனர்.

அப்பகுதியில் சமீபத்தில் பெய்த வட கிழக்கு பருவமழையாலும், புகையான் போன்ற நெல் பயிரை தாக்கும் கொடிய  பூச்சியினாலும் விவசாயம் பெரும் பாதிப்புக்குள்ளாகியும் மீதம் இருக்கும் நெல்லையாவது விற்க அப்பகுதியில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைத்து விவசாயிகள் படும் கஷ்டத் தையும், வாழ்வாதாரத்தையும் போக்க வேண்டும்.  தற்போது கண்டிச்சங்காடு கிராமத் தில் தமிழக அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைக்காததால், அந்த  பகுதியில் ஒரு வாரத்திற்கு மேலாக  அறுவடை செய்து வைத்திருக்கும் நெல்லை தனியாரிடம் கூட விற்க  முடியாமல் தவித்து கொண்டிருக்கின்ற னர். உடனே தமிழக அரசு தலையிட்டு விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாது காக்க வேண்டும் என விவசாயிகள் கோரி க்கை வைத்துள்ளனர்.