ஒன்றியஅரசை கண்டித்து வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அளித்த கீழடி அகழாய்வு அறிக்கையை எவ்வித திருத்தமின்றி உடனடியாக வெளியிடக்கோரி செவ்வாயன்று (ஜூலை 29) மாநிலம் முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். இதன் ஒருபகுதியாக தென்சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ் தலைமையில் அசோக் நகர் அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு, பொருளாளர் திவாகர், விருகை பகுதிச் செயலாளர் ஆ.ராஜ்குமார் உள்ளிட்டோர் பேசினர்.