கிருஷ்ணகிரி,ஜூலை 11- கிருஷ்ணகிரி மாவட் டம், சூளகிரியில் நடை பெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட பயிற்சி முகாமில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருண் ணன் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் சேக ரிக்கப்பட்ட தீக்கதிர் ஆண்டு சந்தா 82, ஆறு மாத சந்தா 75, மாத சந்தா 43 ஆக மொத்தம் 200 சந்தாக்களை வழங்கினர். மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் ஜி.கே. நஞ்சுண்டன், கிருஷ்ணகிரி மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் சேகர், இருதய ராஜ், பிரகாஷ் கோவிந்த சாமி ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, சி.பி. ஜெயராமன், மகா லிங்கம், ஒன்றிய செயலாளர் கள் ஓசூர் ராஜா ரெட்டி, தளி வெங்கடேஷ், கெலமங்க லம் ராஜா,வட்டச் செயலா ளர்கள் கிருஷ்ணகிரி பெரிய சாமி, போச்சம்பள்ளி சாமு, சூளகிரி முனியப்பா சிங்கா ரப்பேட்டை சபாபதி ஆகி யோர் உடனிருந்தனர்.