districts

img

விவசாயிகள் சங்க போராட்டத்தால் அருந்ததிய மக்களுக்கு சிட்டா, அடங்கல் கிடைத்தது

கிருஷ்ணகிரி, பிப். 2- அருந்ததியர்கள் குடியிருப்பு களுக்கு பட்டா சிட்டா, அடங்கல் பதிவேற்றம் செய்யக் கோரி விவசாயிகள் சங்கம் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது. அதிகாரிகளின் சிட்டா வழங்கியதால் போராட்டம் கைவிடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் மாதம்பட்டி ஊராட்சி வசந்தபுரத்தில் 100க்கும் மேற்பட்ட அருந்ததியர்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு நாய்பிராம்பட்டி கிராம சர்வே எண் 2006இல் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால் கிராம கணக்கில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. இதுகுறித்து பலமுறை பல போராட்டம் நடத்தியும், கிராம சபை கூட்டங்களில் தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட கடந்தாண்டு ஜூன் மாதம் அதே பழைய பட்டாக்களுக்கு மாறாக புது பட்டாக்கள் வழங்கப்பட்டது. அதன் பிறகும் கிராம கணக்கில இதுவரை பதிவேற்றம் செய்யப்படாமல், சிட்டா அடங்கலும் வழங்கப்படாமல் லஞ்சம் கேட்டு இழுத்தடிக்கப்பட்டது.

இந்நிலையில் அருந்ததிய மக்களுக்கு வழங்கப்பட்ட  பட்டாக்களை கிராம கணக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டும், சிட்டா அடங்கல் வழங்கேண்டும், ஊத்தங்கரை வட்டத்தில் இது போல வழங்கப்பட்டுள்ள வீட்டு மனை பட்டாக்கள் முழுவதும் கணக்கேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும், பதிவேற்றம் செய்யாமல் இழுத்தடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஊத்தங்கரை வட்ட குழு செயலாளர் அண்ணாமலை தலைமை யில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் பிரகாஷ் போராட்டத்தை துவக்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன், வட்டச் செயலாளர் மகாலிங்கம், முருகன், குப்பன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் செல்வராசு ஆகியோர் வாழ்த்த்திப் பேசினர்.   இதற்கிடையே வட்டாட்சியர் கோவிந்தராஜன், தலைமை இடத்து நில அளவையர் அரு ணாச்சலம், துணை வட்டாட்சியர் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு அருந்ததிய மக்க ளின் 11 வீடுகளுக்கு சிட்டா, அடங்கல் ஆகியவற்றை அங்கேயே வழங்கியதுடன், கிராம கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரி வித்தனர். மேலும் மீதம் உள்ள வீடு களுக்கும் உடனடியாக சிட்டா, அடங்கல் வழங்க தொடர் நட வடிக்கை எடுப்பதாகவும் உறுதி யளித்தனர். கோரிக்கை வெற்றி அடைந்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.