districts

img

ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு விருது

கிருஷ்ணகிரி,மார்ச் 16- சென்னையில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ  மனைகளுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை மற்றும் ஆராய்ச்சி நிறு வனத்திற்கு “டைம்ஸ் ஹெல்த் எக்ஸலன்ஸ்” விருது வழங்கப்பட்டது. இந்த விருதை ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் கல்லூரியின் தாளாளர் த.லாசியா தம்பிதுரையிடம் வழங்கினார். இதுகுறித்து தாளாளர் கூறுகையில், “மருத்துவத்துறை  யில் எங்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சுகா  தார முன்முயற்சியில் மாவட்ட மக்களுக்கும், சமூகத்திற்கும் குறிப்பிடத்தக்க சிறப்பான பங்களிப்பை செய்து வரு வதற்காக இந்த விருது வழங்கப் பட்டது”என்றார்.