districts

img

கிருஷ்ணகிரி அணையில் இருந்து 14,618 கனஅடி நீர் திறப்பு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி, ஆக. 31- கிருஷ்ணகிரி அணையில் இருந்து 8 மதகுகள் வழியாக வினாடிக்கு 14618  கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட் டுள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்க ளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார். தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்பு  பகுதிகள் மற்றும் மாவட்டத்தில் பெய்த  கனமழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஓசூர், சூளகிரி மற்றும் வேப்பனப் பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திங்கட்கிழமை பெய்த கன மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு  நீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கி யது. செவ்வாய்க்கிழமை அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 16,250 கன அடியாக இருந்தது. புதன்கிழமை (ஆக. 31) நீர்வரத்து சற்று குறையத் தொடங்கியது. இதுகுறித்து ஆட்சியர் கூறுகை யில், கிருஷ்ணகிரி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 49.90 அடி உள்ளது. அணைக்கு வினாடிக்கு வந்து  கொண்டிருக்கும் 14,618 கனஅடி தண்ணீர், முழுவதும் பிரதான மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது.
8 கிராமங்களுக்கு எச்சரிக்கை
இதனால் பெரியமுத்தூர், திம்மா புரம், சுண்டேகுப்பம், காவேரிப் பட்டிணம், கால்வே ஹள்ளி, பெண் ணேஸ்வரமடம் சௌட்டஹள்ளி, தளி ஹள்ளி உட்பட 8 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப் பட்டுள்ளது. மேலும் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் தாழ் வான பகுதியில் உள்ள மக்கள் பாது காப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறது.
ஆற்றை கடக்க கூடாது
பொதுமக்கள் யாரும் தென் பெண்ணை ஆற்றை கடக்க கூடாது,  கால்நடைகளை நீர்நிலை பகுதிக ளுக்கு அழைத்து செல்ல கூடாது. மேலும், பெய்து வரும் கனமழை காரண மாக ஏரி, குளம், குட்டைகள் பெருமள வில் நீர் நிரம்பி உள்ள காரணத்தினால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நீர்நிலைகளுக்கும், ஆற்று பகுதி களுக்கு குளிக்கவோ, வேடிக்கை பார்க்க செல்வதை அனுமதிக்க கூடாது. கரையோரம் வசிக்கும் பொது  மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம்  வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தயார் நிலையில் 37 குழு
தொடர் மழை பெய்து வருவதால் மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 37 இடங்கள் ஆபத்தான பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக மணல்  மூட்டைகள், பாதுகாப்பு உபகரணங் கள், தீயணைப்பு துறை, காவல் துறை,  ஊரக வளர்ச்சி துறை, வருவாய் துறை அலுவலர்கள் மூலமாக குழு  அமைக்கப்பட்டு அனைத்து தாலுக்காவிலும் 37 குழுவினர் தயார் நிலையில் உள்ளனர் என்று ஆட்சியர் தெரிவித்தார்.

;