districts

img

வங்கிகள் அதிக கடனுதவி வழங்க வேண்டும்: ஆட்சியர்

காஞ்சிபுரம்,  ஜூன் 9- வங்கிகளின் வாடிக்கையாளர் தொடர்பு முகாம்  வியாழனன்று (ஜூன் 9) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர்  ஆர்த்தி தலைமை தாங்கினார். முகாமில் விவசாயம், தொழில் முனைவோர் மற்றும் தனி நபர் கடனாக 5,353 பயனாளிகளுக்கு ரூ.344.53 கோடி கடனுதவிகளையும், வங்கிகளுக்கு சான்றிதழ்களையும் அவர் வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-  வங்கிகள் மாவட்டத்தில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும் வகையில் செயல்பட வேண்டும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள், பட்டியல் இனத்தவர்கள், சிறுபான்மையினர் மற்றும் மகளிர் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து கடன் வழங்க வேண்டும். தொழில் முனைவோர் களுக்கு அதிக கடன்களை கொடுத்து மாவட் டத்தில் அதிகமான வேலை வாய்ப்பை பெருக்க உதவ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

;