districts

ஆயத்த ஆடை உற்பத்தி அலகு அமைக்க அழைப்பு

கள்ளக்குறிச்சி, செப். 22- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆயத்த ஆடை உற்பத்தி அலகு அமைக்க விண்ணப்பிக்க லாம் என மாவட்ட ஆட்சி யர் ஷ்ரவன் குமார் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக 10 நபர்களைக் கொண்ட குழு வாக அமைத்து, ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு தலா ரூ.3 லட்சம் வீதம் தமிழகம் முழுவதும் 25 அலகுகள் ஏற்படுத்த அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது.  தையல் தொழிலில் ஈடுபட்டு வரும் பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த ஆண், பெண் 10 நபர்களைக் கொண்டு ஒரு குழு அமைத்து, ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க உபகரணங்கள் வாங்குவதற்கு தோராய மாக சிங்கிள் நீடில் இயந்திரம் தலா ரூ. 20,000 வீதம் 5 எண்ணிக்கையிலும், ஓவர் லாக் இயந்திரம் ரூ. 30,000, கட்டிங் இயந்திரம் ரூ.15,000, கட்டிங் மேஜை ஒன்று ரூ.15,000. இன்டஸ்ட்ரியல் அயனிங் மேஜை ரூ. 30,000, உபகரணங்கள் கொள் முதல் செய்ய ரூ.10,000, இடைநிகழ்ச் செலவினம் ரூ. 50,000  மற்றும் பணி மூலதனம் ரூ.50,000 வீதம் என மொத்தமாக ஒரு குழு விற்கு ரூ. 3,00,000 வழங்கப்படும்.

குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதர வற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கு முன்னுரிமையும் 10 நபர்களைக் கொண்ட ஒரு குழுவாகவும் அதில் 10 நபர்களுக்கும் தையல் தொழில் தெரிந்திருத்தலும் அவசியமாகும்.  குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த வர்களாகும். குழுவில் உள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். தகுதி யான குழுக்களை அமைத்து, அக்குழுவின் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல் படும் மாவட்ட பிற்படுத்தப்  பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலுவ லகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்று, விண்ணப்பித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;