கள்ளக்குறிச்சி, நவ.6- கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடியில் 15 ஆண்டுகளாக பணி செய்து வந்த 28 பணியாளர்களை திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த 35 நாட்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்த நிலையிலும் மாவட்ட நிர்வாக மும் தமிழக அரசும் கண்டுகொள்ள வில்லை. ஆகையால் ஆதார் அட்டை நகலை எரித்து குடியுரிமை தேவையில்லை கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் நிறுத்தி வைக்கப்பட்ட பிடிப்பு தொகை வழங்க வேண்டும் என முழக்கமிட்டு ஒன்றிய,மாநில அரசுக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.