districts

நலத்திட்ட உதவிகளுக்கு கையூட்டு பெறும் தரகர்கள்: மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி, மார்ச் 18- மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலமாக மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை பெற்றுத் தருவதாக கூறி கையூட்டு பெறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் எச்சரித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலமாக அனைத்து நலத்திட்டங்களும் வரு மான வரம்பின்றி தகுதியின் அடிப்படையில் இலவசமாக வழங்கப்படுகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கைகால் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள், காது கேளா தோருக்கு ஆண்ட்ராய்டு அலைபேசி முற்றி லும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பெட்ரோல் ஸ்கூட்டர்கள் மற்றும் அலைபேசி உள்ளிட்ட நலத்திட்ட உதவி களை மாற்றுத்திறனாளிகளுக்கு பெற்றுத்தருவதாக கூறி சில தனி நபர்கள், இடைத்தரகர்கள் உள்ளிட்டோர் மாற்றுத்திறனாளிகளிடம் பணம்பெறுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வரப் பெற்றுள்ளது. இது மிகப்பெரிய குற்றமாகும்.  தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் நபர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மீது காவல்துறை மூலம் சட்டரீதியிலான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் எச்சரிக்கை செய்திருக்கிறார்.

;