districts

‘ஆற்றல் திறன்மிகு வாழ்விடங்கள்’ பயிற்சிப் பட்டறை

கரூர், ஜூன் 16 - தமிழ்நாடு அரசு சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் சார்பில் இந்தியன் இன்ஸ்டி ட்யூட் ஆப் ஹ்யுமன் செட்டில் மென்ட்ஸ் நிறுவனம் மூல மாக கரூரில் உள்ள தனி யார் விடுதியில் “ஆற்றல் திறன்மிகு வாழ்விடங்கள்” குறித்த இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை ஜூன்  14, 15 ஆகிய தேதிகளில் நடை பெற்றது. சனிக்கிழமை நடை பெற்ற இரண்டாம் நாள் பயிற்சிப் பட்டறையில் மாவட்ட ஆட்சியர் மீ.தங்க வேல் கலந்து கொண்டார்.

இதில் காலநிலை மாற்றத் தால் ஏற்படும் பேரிடர்கள் குறித்தும், அதனை எதிர் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசி யம் குறித்தும், உலகளாவிய பசுமை கட்டிட விதிமுறை களை கடைப்பிடிக்கவும், மரபு சார் எரிசக்தி உபயோ கத்தை குறைக்கவும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல்  பயன்பாட்டினை அதிகப் படுத்தவும், கட்டிட பொறியா ளர்கள் பசுமை கட்டிடங்கள்  குறித்த தங்கள் சந்தேகங்க ளையும், மக்களிடம் பசுமை  கட்டிடங்கள் குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்த வேண்டிய தன் அவசியம் குறித்த பயிற்சிப் பட்டறையில் துறை சார்ந்த வல்லுநர்கள் தங்கள்  கருத்துகளைத் தெரிவித்த னர்.

இரண்டாம் நாள்  பயிற்சிப் பட்டறையில் மாவட்ட ஆட்சியர் தங்க வேல் தெரிவிக்கையில், “கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த குடியிருப்போர் நல  சங்கத்தினருக்கு வீடுகள்  மற்றும் தங்கள் குடியிருப்பு  வளாகங்களில் சுற்றுச்சூழ லுக்கு உகந்த செயல்முறை களை எவ்வாறு மேற்கொள் வது என்பது குறித்த பயிற்சி கள் வழங்கப்பட்டு வரு கின்றன. 

தமிழ்நாடு, காலநிலை மாற்றத்தை தணிப்பதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்வதில் முன்னோடி யாக உள்ளது. அரசுடன், தனியார் மற்றும் பொதுமக்கள் இணைந்து, காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் உறுதுணையாக செயல்பட வேண்டும். பொதுமக்கள் ஆற்றில் கழிவுகளை கொட் டுவதை தவிர்க்க வேண் டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை  தவிர்க்க வேண்டும். மின்சா ரத்தை சேமிக்க வேண்டும் எனவும், அனைவரும் சுற்றுச் சூழலுடன் இணைந்து ஆரோக்கியமான வாழ்வை வாழவும், நம் கரூர் மாவட் டத்தை காலநிலை திறன்மிகு  மாவட்டமாக மாற்ற உறுதி பூணுவோம்” எனவும் தெரி வித்தார். 

ஐ.ஐ.எச்.எஸ் நிறுவனத் தைச் சார்ந்த விஸ்வநாத் மற்றும் மோனிஷா ஆகி யோர் இப்பயிற்சிகளை வழங்கினர்.

;