districts

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை கரூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

கரூர், ஜூன் 1 -  சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி கரூர் மாவட்ட நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள விராலிப்பட்டியைச் சேர்ந்தவர் உமர்முக்தர் (47). இவர் மூன்று திருமணங்கள் செய்துள்ளார். இவரது 3 மனைவிகளையும் பிரிந்து கடந்த 5 ஆண்டுகளாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள சின்ன தாராபுரம் முதலியார் தெருவில் தங்கி உமர்முக்தர் டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வந்தார்.  இந்நிலையில், இவர் கடந்த 2021 செப்டம்பர் 7 ஆம் தேதி 5 வயது சிறுமியை  பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் சின்னதாராபுரம் போலீ சார் உமர்முக்தர் மீது போக்சோ சட்டத் தின் கீழ் வழக்கு பதிந்து அவரை கைது  செய்தனர். இவ்வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் மே 31 ஆம் தேதி நீதிபதி நசீமா பானு தீர்ப்பளித்தார். அதில், சிறுமியை கடத்திய குற்றத்திற் காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும்,  ரூபாய் ஆயிரம் அபராதமும், அதனை  கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு  சிறைத் தண்டனையும், சிறுமியை பாலியல்  வன்கொடுமை செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய் ஆயிரம்  அபராதமும், அதனைக் கட்டத்தவறி னால், மேலும் ஓராண்டு சிறைத் தண்ட னையும், இவற்றை ஏக காலத்தில் அனு பவிக்கவும் உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் இழப்பீட்டு தொ கையை, இத்தீர்ப்பு நகல் கிடைக்கப் பெற்ற 3 மாதங்களுக்குள் வழங்கவும் உத்தரவிட்டார்.

;