districts

கரூர் மாவட்ட கல்வி அலுவலர் மீது நடவடிக்கை கோரி ஏப்.19 ஆர்ப்பாட்டம்

கரூர், ஏப்.16 - தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கரூர் மாவட்டக் குழு கூட்டம் கரூர் உழவர் சந்தை அருகே உள்ள சங்க அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.  சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் கணேசன், மாநில துணைத் தலைவர் முருகன்  ஆகியோர் எதிர்கால பணிகள் குறித்து பேசினர். மாவட்ட செயலாளர் ஜ.ஜெயராஜ் வேலையறிக்கையை முன்வைத்து பேசினார்.  தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்ட ணியின் நிர்வாகிகளை பழிவாங்கும் நோக்கத் துடன் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ள உத்தரவை உடனடியாக ரத்து செய்திட வேண்டும். கரூர் மாவட்ட கல்வி அலுவலர் மதன்குமார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும் அலுவலரை வேறு மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்திட வேண்டும். ஏப்.19 ஆம் தேதி கரூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடை பெறும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்க ணக்கானோர் கலந்துகொள்வது என்பன  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.