districts

பூலான்வலசு கிராமத்தில் சேவல் சண்டை நடத்த அனுமதி மறுப்பு

கரூர், ஜன.14 - கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியம், பூலான்வலசு கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் சேவல் சண்டை நடத்துவது வழக்கம்.  சேவல் சண்டையின் போது விதி முறைகளை மீறி சேவலின் கால்களில் கட்டப்படும் கத்திகளால் சண்டையின் போது, சேவல் மட்டுமின்றி, சண்டை  நடத்துவோரும் கத்திபட்டு உயிரிழக் கின்றனர்.  இதனால் நடப்பாண்டு சேவல்  சண்டைக்கு அனுமதி வழங்கக் கூடாது என கரூர் மாவட்ட பாமக செயலாளர் பிரேம்நாத், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொ டர்ந்தார். இதையடுத்து, ஜன.25 ஆம் தேதி வரை சேவல் சண்டை நடத்தக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் பூலான்வலசில் சேவல் சண்டை நடத்தும் குழுவினர் சார்பில்  சண்டை நடத்தும் இடத்தில் அனைத்து  முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந் தன. வழக்கம் போல ஜனவரி 14 ஆம்  தேதி சேவல் சண்டை நடைபெறும் என்ற  எதிர்பார்ப்புடன்,  மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், இராமநாதபுரம் உட்பட  பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந் தோர், தங்களது சேவல்களுடன் பூலான் வலசு கிராமத்திற்கு சனிக்கிழமை அதி காலையிலேயே வரத் தொடங்கினர்.  இருப்பினும் பூலான்வலசு சோத னைச்சாவடியில் பாதுகாப்புக்கு நின்றி ருந்த காவல்துறையினர், அனுமதி இல்லை என்று கூறியதால், ஏமாற்றத் துடன் திரும்பி சென்றனர்.

;