districts

வேளாண் கல்லூரியை இனுங்கூர் விதைப் பண்ணையில் அமைத்திடுக! விவசாயிகள் சங்க ஒன்றிய மாநாடு கோரிக்கை

கரூர், ஜூலை 5 -  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் குளித்தலை ஒன்றிய மாநாடு நங்கவரத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு ஒன்றிய குழு உறுப்பினர் பி.ரெங்கசாமி தலைமை வகித் தார். சங்கத்தின் மாநிலத் துணைத் தலை வர் கே.முகமதுஅலி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் கே. சக்திவேல், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் பி.ராஜு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குளித்தலை ஒன்றிய  செயலாளர் இரா.முத்துசெல்வன் ஆகி யோர் வாழ்த்தி பேசினர்.  குளித்தலை ஒன்றிய புதிய தலைவராக டி. இளங்கோவன், செயலாளராக பி.சங்கர நாராயணன், ஒன்றிய பொருளாளராக பி. ரெங்கசாமி உட்பட 9 ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். வேளாண்மைத் துறை மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நங்க வரத்தில் நிரந்தர கட்டிடம் அமைக்க வேண்டும். நங்கவரம் பேரூராட்சியில் வாரச் சந்தைக்கு கட்டிடம் கட்டிக் கொடுக்க  வேண்டும். கரூர் மாவட்டத்திற்கு ஒதுக்கப் பட்ட வேளாண் கல்லூரியை குளித்தலையை அடுத்துள்ள இனுங்கூரில் உள்ள விதைப் பண்ணையில் அமைத்திட வேண்டும். குளித்தலை அரசு மருத்துவமனை மாவட்ட  தலைமை மருத்துவமனையாக தொடர்ந்து செயல்பட வேண்டும். நெல் குவிண்டால் விலை ரூ.2500 என அறிவிக்க வேண்டும். விவ சாயிகள் பயன்படுத்தும் வேளாண் இயந்திரங் களுக்கு வாடகையை ஒழுங்குபடுத்தி நிர்ண யம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;