districts

புவனகிரி பேரூராட்சி மறு தேர்தலில் விசிக வெற்றி

சிதம்பரம், பிப்.25- கடலூர் மாவட்டத்திலுள்ள புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டில்  வாக்குப்பதிவு இயந்திரம் திடீரெனப் பழுதானது. பின்னர் பெல் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் சரிபார்த்தும், அதனைச் சரி செய்ய முடியவில்லை. இதனால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.  பிறகு, இந்த வார்டுக்கான மறுதேர்தல் 24 ஆம் தேதி நடைபெற்றது. இதில் 813 பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்ததும், அதே பள்ளியில்  வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் 622 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் புவனகிரி பேரூராட்சியைப் பெரும்பான்மையுடன் திமுக கைப்பற்றியுள்ளது.