districts

மழை பாதிப்புகளை எதிர்கொள்ள கடலூரில் 21 மண்டல அலுவலர்கள்

கடலூர், நவ.4- கடலூர் மாவட்டத்தில் 21 மண்டல அலுவலர்கள் நியமனம் செய்து, அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதி களை கண்காணித்து முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப் பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் பால சுப்பிரமணியம் கூறினார். வடகிழக்கு பருவ மழை தொடங்கி யதையடுத்து கடலூரில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. இதனால் மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான வீடுகளில் தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இந்நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம் வண்ணாங்குட்டை, பகுதியில் தேங்கி யிருந்த மழை நீரை மோட்டார் மூலம் மழை  நீர் வெளியேற்றும் பணியினை ஆட்சியர் பாலசுப்பிரமணியம், அய்யப்பன் எம்.எல்.ஏ,  மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் வெள்ளியன்று (நவ. 4) நேரில் சென்று பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து அங்காளம்மன் கோவில் தெரு, பாஷ்யம் தெரு, வி.பி.ஆர். நகர் மற்றும் அண்ணா நகர் ஆகிய பகுதி களில் மாநகராட்சி சார்பில் மழைநீர் சூழ்ந்துள் ளதை வெளியேற்றும் பணிகளையும் பார்வையிட்டனர்.

பின்னர் ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை தொடங்கிய தால் சிதம்பரம் பகுதியில் 15 சென்டி மீட்டர்  மழை அளவும், தலைநகரான கடலூர் பகுதி யில் 65 மில்லி மீட்டர் மழை அளவும்  பதிவாகி உள்ளது?. மேலும் மாவட்டத்தில் 278 பாதிக்கப்படும் பகுதிகளாக கண்டறிந்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகராட்சியில் 20க்கும் மேற்பட்ட இடங்கள் மழையால் பாதிக்கப்படக்கூடிய பகுதியாக கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாவட்டத்தில் 34 கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்ததில் ெஜசிபி இயந்திரம் மூலம்  தண்ணீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் மாவட்டத்தில் 21  மண்டல அலுவலர்கள் நியமனம் செய்து  அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளை  தீவிரமாக கண்காணித்து முன்னெச் சரிக்கை பணிகள் மேற்கொள்ள அறிவுறுத் தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. தற்போது மழைநீர் வடிந்த பிறகு அதனு டைய பாதிப்புகள் அறியப்பட்டு அவர்க ளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை  மேற்கொள்ளப்படும். மேலும் கடலூர் மாவட்டத்தில் 3 நாட்களுக்கு கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

;