கடலூர், ஜூன் 15- வடலூர் பஜார்சாலையிலுள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கடலூர் மாவட்ட ஆட்சியர் பால சுப்பிரமணியத்தை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் கோ.மாதவன் தலைமையிலான குழுவினர் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், வடலூர்-பண்ருட்டி சாலை பாலாஜி நகரில் திறக்கப்பட்டிருக்கும் டாஸ்மாக் கடையால் பெண்கள்-மாண வர்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது. மேலும், பிரதான சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. சிலர் உயிரிழந்துள்ளனர். எனவே, அந்த கடையை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தனர். வடலூர் நகரச் செயலாளர் இளங்கோவன், மாநகரச் செயலாளர் அமர்நாத், மாவட்டக் குழு உறுப்பினர் சிவகாமி, மாதர் சங்க நிர்வாகிகள் ரேவதி, கிருத்திகா, அருணா, கோமதி ஆகியோர் உடனிருந்தனர்.