districts

கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தில் மாணவர் சேர்க்கை

கடலூர், ஏப். 28- கடலூர் மாவட்டத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நலிவடைந்த மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்பில் (எல்.கே.ஜி பிரிவில்) 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. பள்ளிக்கல்வித் துறையின் சவந.வளேஉhடிடிட.படிஎ.in என்ற இணையதளத்தில் மே 18 வரை விண்ணப்பிக்கலாம். தகுதியான பள்ளிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை பள்ளியின் அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும். எல்.கே.ஜி வகுப்பிற்கு விண்ணப்பிப்போர் 1.8.2018 முதல் 31.7.2019க்குள் பிறந்திருக்க வேண்டும்.  மேலும், ஆதரவற்றவர், மாற்றுத்திறனாளியின் குழந்தை, மூன்றாம் பாலினத்தார், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தை, தூய்மை பணியாளர்களின் குழந்தை போன்றோர்களுக்கு உரிய அலுவலரால் வழங்கப்பட்ட சான்றினை இணைக்க வேண்டும். இவர்களுக்கு, குலுக்கல் நடத்துவதற்கு முன்னரே சேர்க்கை வழங்கப்படும். எனவே இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;