districts

img

அபாய நிலையில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி!

சிதம்பரம், ஜூலை 24 - சிதம்பரம் அருகே கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுகாலூர் ஊராட்சி உள்ளது. இங்க 2500க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சிக்குள் மனக்குடியான் இருப்பு கிராமம் உள்ளது. இங்கு 600க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மனக்குடியான் இருப்பு கிராமத்தில் 22 ஆண்டுகளுக்கு முன்பு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப் பட்டது. தற்போது குடிநீர் தொட்டி சிமெண்ட் காரைகள், கம்பிகள் பெயர்ந்து சிதில மடைந்து மோசமான நிலையில் உள்ளது.  தொட்டியின் தூண்களும் அரித்து போய் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால், தண்ணீர் தொட்டியின் பாது காப்பு கருதி  15 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மட்டுமே ஏற்றப்படுகிறது. இதனால் சில தெரு களுக்கு தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.  எனவே, குடிநீர் தொட்டியை இடித்து விட்டு புதியதாக கட்டித் தர வேண்டும் என அலுவலர்களிடம் பொதுமக்கள் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. குடிநீர்த் தொட்டியின் கீழ் விபரீதம் புரியாமல் அவ்வப்போது குழந்தைகள் சென்று விளையாடுகிறார்கள். குடிநீர் தொட்டியை கடந்து செல்லும் மக்கள் அச்சத்துடனே செல்லும் நிலை உள்ளது. எனவே, விபத்து ஏற்படும் முன் புதிய குடிநீர் தொட்டி கட்டி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இந்தப் பகுதியில் 20க்கும் மேற்பட்ட 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருக்கும் இடத்தி லிருந்து 2 கிமீ தொலைவில் அங்கன்வாடி மையம் உள்ளது. இதனால் குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, மனக்குடி யான் இருப்பு கிராமத்திலேயே குழந்தை கள் அங்கன்வாடி மையம் அமைத்துத் தரவேண்டும்,  தனியார் கட்டிடத்தில் இயக்கும் நியாயவிலைக் கடைக்கு சொந்த கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்றும் அங்குள்ள மக்கள் கோருகின்றனர்.