districts

என்எல்சியில் மாற்று மறு குடியமர்வு கொள்கையை உருவாக்குக சிபிஎம் கோரிக்கை

கடலூர்,ஏப்.21- என்எல்சி நிறுவனத்தில் மாற்று மாறு குடியமர்வு கொள்கை உரு வாக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:- நெய்வேலி காவல் நிலையத்தில் பட்டாம்பாக்கம் சுப்ரமணியம் லாக் ஆப் மரணமடைந்தது விவகாரத்தில்  நீதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருகிறது. இந்த வழக்கில் சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்று சுப்ர மணியன் மனைவி ரேவதி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தார். ஆனாலும், மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தி வருவதை வன்மையாக கண்டிக்கிறோம். என்எல்சி இந்தியா நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தப்படும் விவ சாயிகளுக்கு மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்க்காண புதிய திட்ட கொள்கையை ஒன்றிய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர்   வெளியிட்டுள்ளார். கடந்த 60 ஆண்டுகளாக என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு, குடும்பத்தில் ஒரு வருக்கு வேலை, மாற்று குடிய மர்வு உள்ளிட்ட திட்டங்களை முழுமை யாக அமல்படுத்தவில்லை. நிலம் கொடுத்த விவசாயிகளின் கோரிக்கையை என்எல்சி நிறுவனம் காது கொடுத்து கேட்ககூட தயாராக இல்லை. இந்த நிலையில், மூன்றாவது சுரங்கத்திற்கு சேத்தியாத்தோப்பு பகுதி  மக்கள் நிலம் கொடுக்க மறுத்துவிட்டனர். இதனால், அத்திட்டம் நிறுத்தி வைக்கப்  பட்டது. அதேபோன்று வடலூர், வானதிராயபுரம்  கிராம மக்க ளும் நிலம் வழங்கமாட்டோம் என்று கூறிவருகின்றனர்.

வளைய மாதேவியை சுற்றியுள்ள ஏழு கிராம மக்கள் என்எல்சி நிறு வனத்திற்கு கண்டனம் தெரித்து போராட்டங்களை நடத்தி வரு கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் விவ சாயிகள், அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் உள்ளிட்டவர்களை அழைத்து கலந்து ஆலோசனை நடத்தாமல் புதிய மறுவாழ்வு குடியமர்வு கொள்கையை தன்னிச்சையாக அறி வித்திருக்கிறது என்எல்சி நிறுவனம். அதில், நிலம் கொடுப்பவர்களுக்கு இனி வேலை இல்லை என தெளி வாக கூறப்பட்டுள்ளது. நிலத்திற்கான இழப்பீடும் மிகக் குறைவாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்று குடியமர்வுக்காக முறையான திட்டங்கள் ஏதும் இல்லை.  இதுவரை நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவது சம்பந்தமாக எந்த அறிவிப்பும் இல்லை. விவசாய நிலத்தை நம்பியுள்ள விவ சாயத் தொழிலாளர்க ளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு எந்த அறிவிப்பும் கிடையாது. ஆகவே, நிலம் கொடுத்த விவசாயி களை பாதுகாக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நிலம் கையகப்படுத்துவது சம்பந்த மாக அனைத்து தரப்பு மக்களின் கருத்துக்களை அறிந்து, வி வசாயிகளை பாதுகாக்கும் வகை யில் நிலத்திற்கு உரிய இழப்பீடு,  வீட்டுக்கு ஒருவருக்கு வேலை,  மறு குடியமர்வு உள்ளிட்ட மாற்று மறுகுடியமர்வு கொள்கையை உருவாக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

;