districts

சிதம்பரம் நகர வார்டு சபை உறுப்பினர் தேர்வு: சிபிஎம் எதிர்ப்பு

சிதம்பரம், நவ. 1- சிதம்பரம் நகரத்தில் வார்டு சபை உறுப்பினர்களை ஜனநாயக முறையில் மறு நியமனம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் நகரச் செய லாளர் ராஜா விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:- தமிழகத்தில்  உள்ளாட்சி தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கிராமசபை கூட்டம் போல நகர்புறங்களில் வார்டு சபை கூட்டங்கள் நடத்த வேண்டும் என்ற வரவேற்கதக்கது. அதனையொட்டி வார்டு சபை குழுவின் தலைவராக வார்டு கவுன்சிலர் செயல்படுவார் என்றும், மூன்று மாதத்திற்கு ஒருமுறை வார்டு சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று அரசாணை வெளியிடபட்டுள்ளது.  மார்க்சிஸ்ட் கட்சி ஆளும் கேரள மாநிலத்தில் உள்ளதை போல ஜன நாயகத்தை பரவலாக்கும் இந்த திட்டம் ஆயிரக்கணக்கான மக்களை உள்ளாட்சி நிர்வாகத்தில் பங்கேற்க வைக்கும் என்பது மிகவும் சிறப்பாகும். இந்த நிலையில் சிதம்பரம் நகராட்சி யில் வார்டு சபை உறுப்பினர்களை தேர்வு செய்வதில் ஜனநாயக ரீதியாக செயல்படவில்லை. வார்டு சபை குழு வின் தலைவராக செயலபட வேண்டிய கவுன்சிலர்களுக்கு தெரியாமல் உறுப்பி னர்களை தேர்வு செய்வது சமபந்த பட்ட கவுன்சிலர்களின் ஜனநாயக உரிமையை பறிப்பதாகும்.  மேலும், அத்தகைய வார்டு குழு நியமனம் செல்லுமா? என்ற கேள்வியையும் எழுகிறது. ஆகவே, மார்க்சிஸ்ட் கட்சி வார்டு கவுன்சிலர்கள் வெற்றி பெற்ற இரண்டு வார்டுகளிலும் வார்டு சபை தலைவர்களான கவுன்சிலர்களுடன் கலந்து ஆலோசித்து புதிதாக நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

;