districts

img

அகில இந்திய பொது வேலை நிறுத்தம்: வட மாவட்ட மறியலில் 30 ஆயிரம் பேர் பங்கேற்பு!

கடலூர் ,மார்ச் 28- ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விவசாய விரோதப் போக்கை கண்டித்து வட மாவட்டங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கடலூரில் நடைபெற்ற மறி யல் போராட்டத்தில் தொமுச மண்டலத் தலைவர் பழனிவேல், சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.கருப்பையன், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் குளோப், ஐஎன்டியுசி மாவட்ட கவுன்சில் தலைவர் மனோகரன்,  விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கோ.மாதவன், விவசாய சங்க மாவட்டப் பொருளாளர் தட்சிணாமூர்த்தி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, கலந்து கொண்டனர்.  அதேபோல் கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி விருத்தாசலம், திட்டக்குடி, காட்டு மன்னார்கோயில், திருமுட்டம், புவனகிரி, சிதம்பரம் உள்ளிட்ட 10 இடங்களில் நடைபெற்ற மறியலில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கடலூர் எல்ஐசி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு கிளைச் செயலாளர் ரெஜீஸ் தலைமை தாங்கினார். வங்கி ஊழியர்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் எஸ்.மீரா தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நடந்த மறியல் போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் டி.ரவிச்  சந்திரன் தலைமை தாங்கினார்.

விழுப்புரம் விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், வானூர், செஞ்சி, அவலூர்பேட்டை, மயிலம், கண்டாச்சிபுரம், கண்டமங்கலம், விக்கிரவாண்டி உள்ளிட்ட 9 மையங்களில் நடைபெற்ற மறியலில் 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். வேலூர், காட்பாடி, குடி யாத்தம், ராணிப்பேட்டை, கலவை உள்ளிட்ட 5 மையங்க ளில் நடைபெற்ற மறியலில் சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன், தலைவர் எம்.பி.ராமச்சந்திரன், கே.ஆர்.சுப்ரமணி, வெ.கலைநேசன், (தொமுச), சிம்புதேவன், சுப்ரமணி, ரமேஷ் (ஏஐடியுசி), கா.வெ.திருப்பதி (எச்எம்எஸ்), ஏகாம்பரம் (ஐஎன்டியுசி), என்.காசிநாதன், சி.சரவணன் (சிஐடியு), விதொச மாவட்டச் செயலாளர் ரகுபதி, விவசாயி கள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.கிட்டு, செல்வம் (ஆட்டோ) உள்ளிட்ட 1,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருப்பத்தூரில் நடைபெற்ற மறியலில் சிஐடியு அமைப்பாளர் கேசவன், ஏஐடியூசி மாவட்டச் செயலாளர் வேணுகோபால், தேவராஜ் (தொமுச), தேவராஜ் (ஐஎன்டியுசி) உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல் வாணியம்பாடியில் நடைபெற்ற மறியலில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். டிஆர்இயூ சார்பில் திருப்பத்தூர் ரயில் நிலையம் அருகே சுப்பிரமணி தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் முத்து கிருஷ்ணன், கோட்ட இணை செயலாளர் கிருஷ்ணன், சிஐடியு கன்வீனர் கேசவன், கூட்டமைப்பு செயலாளர் ஜோதி,  காசி (டிஆர்இயு), ரவி (பிஎஸ்என்எல்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை, சங்கரா புரம், கள்ளக்குறிச்சி, சின்ன சேலம், திருக்கோவிலூர், ரிஷிவந்தியம் ஆகிய 6 மையங்களில் நடைபெற்ற மறியலில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜெய்சங்கர், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆனந்தன், ஏழுமலை, சிஐடியு மாவட்டத் தலைவர் விஜய குமார், செயலாளர் செந்தில், பொருளாளர் வீராசாமி உள்ளிட்ட 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருவண்ணாமலையில் 16 மையங்களில் நடைபெற்ற மறியலில் தொமுச மண்டல பொதுச்செயலாளர் க.சவுந்த ரராஜன், சிஐடியு நிர்வாகிகள் இரா.பாரி, காங்கேயன், எம்.வீரபத்திரன், அப்பாசாமி, வே.சங்கர், தண்டபாணி, ஏஐடியுசி நிர்வாகிகள் வே.முத்தையன், மாதேஸ்வரன், தங்கராஜ், டி.கே.வெங்கடேசன், எஸ்.பலராமன்,  பிரகலநாதன், கே.கே.வெங்கடேசன், கணபதி, பால்ராஜ், சிபிஎம் மாவட்டச் செய லாளர் எம்.சிவகுமார் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, ஊத்தங்  கரை, அஞ்செட்டி, தேன்கனிக்  கோட்டை உள்ளிட்ட5 மையங்க ளில் நடைபெற்ற மறியலில் ஸ்ரீதர், பீட்டர், கிருஷ்ணன் (சிஐடியு), கோபாலகிருஷ்ணன், கிருஷ்ணன் (தொமுச), கோவிந்தம்மா, கஸ்தூரி (அங்கன்வாடி ஊழியர் சங்கம்), மாதையன் (ஏஐ டியுசி), வாசுதேவன் (ஆட்டோ), அசோக் லேலண்ட் தொழிற்சங்க நிர்வாகிகள் குமரேசன், செல்வம், மாதவன், ஜோதியப்பா, டபிள்யூபிடியூசி நிர்வாகி சத்தியமூர்த்தி, ராமர், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கோவிந்தசாமி, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சபா பதி உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

;