districts

நீதிமன்றத்தால் கொலைவழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ள ஆய்வாளர் ராஜா உள்ளிட்ட காவலர்களை பணி நீக்கம் செய்ய சிபிஎம் வலியுறுத்தல்

கடலூர்,பிப்.17- பி.என்.பாளையம் சுப்பிரமணி காவல் நிலையத்தில் சித்தரவதை செய்து கொல்லப்பட்ட வழக்கில், கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் காவல் ஆய்வாளர் ராஜா, உள்ளிட்ட காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட்  கட்சி வலியுறுத்தி உள்ளது. கட்சியின் கடலூர் மாவட்ட மையக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.ஆறுமுகம் தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் மாவட்டச் செய லாளர் கோ.மாதவன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மருத வாணன், வி.உதயகுமார், வி. சுப்ப ராயன்,  ஜெ.ராஜேஷ் கண்ணன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: கடலூர் மாவட்டம் பி.என்.பாளை யம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் கடந்த 29.2.2015 அன்று நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் காவல்நிலைய ஆய்வாளர் ராஜா மற்றும் காவலர்களால் சித்தரவதை செய்து அடித்துக் கொல்லப்பட்டார். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட ஜனநாயக இயக்கங்க ளின் போராட்டத்தின் விளைவாக  நெல்லிக் குப்பம் காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என 174வது சட்டப்பிரிவின் கீழ்  வழக்குப் பதிவு செய்யப்பட்டது.  மீண்டும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின்  தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவாக இந்த வழக்கு  சிபிசிஐடி க்கு மாற்றம் செய்யப்பட்டது. சிபிசிஐடி விசாரணையின்  இறுதியில் நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலைய ஆய்வாளர் ராஜா, உதவி ஆய்வாளர் செந்தில்வேல், காவலர் சௌமியன் ஆகிய மூன்று பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு இது கொலையாகாத மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதி மன்றத்தில் அதுகுறித்த தகவல் தெரி விக்கப்பட்டது.  

இந்த வழக்கில் இருந்து தப்பிக்க ஆய்வாளர் ராஜா தனது செல்வாக்கை பயன்படுத்தி அரசியல் கட்சி தலைவர்கள் மூலமும், பிற முக்கிய நபர்கள் மூலமும், புகார்தரரான ரேவதிக்கு பல்வேறு நெருக்கடிகளும் பிரச்சனைகளும் கொடுத்து வந்தார். மேலும் ராஜா உள்ளிட்ட குற்றவாளிகள் நீதி மன்றத்தில்  ஆஜராகாமல் வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் காலம் தாழ்த்தி வந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கறிஞர்கள் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறை யிட்டபோது, முகாந்திரம் இருந்தால் கொலை மற்றும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை வழக்காக மாற்றிக் கொள்ளலாம் என தீர்ப்பு பெறப்பட்டு, கடலூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த மனு நடைபெற்ற மீது விசாரணை யில்  22.8.2022-ம் தேதி அன்று குற்றம் சாட்டப்பட்ட ஆய்வாளர் ராஜா, சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில் வேல், காவலர் சௌமியன் ஆகியோர் மீது கொலை மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவுகளில் வழக்கு தாக்கல்செய்ய  கடலூர் மாவட்ட சிறப்பு எஸ்சி,எஸ்டி நீதிமன்றம் உத்தரவிட்டது.  குற்றவாளிகள் மீது கொலை வழக்கு மற்றும் எஸ்சி,எஸ்டி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள நிலை யில் காவல்துறை ஆய்வாளர் ராஜா, உதவி ஆய்வாளர் செந்தில்வேல், காவலர் சௌமியன் ஆகியோரை காவல்துறை பணியில் இருந்து நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி  குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஆய்வாளர் ராஜா மீண்டும் தற்போது கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் காவல் நிலைய ஆய்வாளராக  16.2.2023 அன்று பொறுப்பேற்றுள்ளார்.  இவரது நியமனம் நேர்மையான விசாரணையை பாதிக்கும், ஏற்கனவே ஆய்வாளர் ராஜா தனது செல்வாக்கை பயன்படுத்தி  அரசியல் கட்சிகள் மூலமும், காவலர்கள் மூல மும், மிரட்டி வருவது தொடர்பாக கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர், தமிழ்நாடு காவல் துறை தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் மனு கொடுக்கப்பட்டது. தற்போது மீண்டும் ஆய்வாளர் ராஜா வடலூர் காவல் நிலை யத்தில் ஆய்வாளராக பணிக்கு வந்துள்ள தால் வழக்கு விசாரணையை பாதிக்கும். எனவே  உடனடியாக வேறு மாவட்டத்திற்கு அவரை மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி 6.3.23 அன்று காலை 10 மணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலு வலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடத்து வது என மாவட்ட மைய குழு கூட்டத்தில்  முடிவு செய்யப்பட்டது.

;