ஓசூர், மார்ச் 14- ஓசூர் மாநகராட்சிக் குட்பட்ட மத்திகிரி பகுதியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் கோரி சாராட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். ஓசூர் மாநகராட்சிக் குட்பட்ட மத்திகிரி பகுதி யில் 30 தூய்மைப் பணி யாளர்கள் ஒப்பந்த தொழி லாளர்களாக கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். மத்திகிரி பேரூராட்சியாக இருந்த போதும், நகராட்சியுடன், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட போதும் வேறு வேறு ஒப்பந்ததாரர்களின் கீழ் மாற்றப்பட்டனர். வருங்கால வைப்பு நிதிக்கு (பிஃப்) ஒவ்வொரு மாதமும் பிடித்தம் செய்யப்பட்டது. தற்போது தினக்கூலியாக வழங்கப்படும் 336 ரூபாயில் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் போக, மாதம் கூலி கணக்கிட்டு வழங்கப்படு கிறது. ஆனால் இதுவரை வருங்கால வைப்பு நிதியை வங்கி கணக்கில் செலுத்தியற்கான எந்த ஆதாரமும் தொழிலா ளர்களுக்கு அளிக்கப்பட வில்லை. இறந்தவர்க ளுக்கும், 58 வயது கடந்த வர்களுக்கும், வேலையை விட்டு நின்றவர்களுக்கும் இதுவரை வைப்புத் தொகை வழங்கப்படவில்லை. வைப்பு நிதி குறித்து ஒப்பந்ததாரர்கள் கூறிய வங்கிகளில் பலமுறை விசாரித்தும் எந்த ஆதாரமும், தகவலும் இல்லை. வைப்பு நிதி, பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கேட்டு பலமுறை அதி காரிகளிடமும், மாநகராட்சி நிர்வாகத்திடமும் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஒப்பந்தம் வரும் மார்ச் 31ஆம் தேதியுடன் நிறை வடைய உள்ள நிலையில், உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வைப்பு நிதி செலுத்தியதற்கான பணத்தை ஒப்பந்ததாரரிடம் இருந்து மீட்டுத் தர வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என ஓசூர் சார் ஆட்சியரிடம் திங்களன்று (மார்ச் 14) மனு அளித்தனர்.