districts

img

ஓசூரில் கிரிக்கெட்போட்டி: டிவிஎஸ் அணிக்கு கோப்பை

ஓசூர், மே 16- காவேரி மருத்துவமனையும் ஓசூர் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேசனனும் இணைந்து நடத்திய தொழிற்சாலைகளுக்கு இடையேயான 3 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி அதியமான் பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 32 அணிகள் பங்கேற்றன.  இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற டிவிஎஸ் அணிக்கு 1 லட்ச ரூபாயும், இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு 75 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் இடம் பிடித்த ஃபஸ்ட் ஸ்டெப்ஸ் பேபி வியர் அணிக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டன. இதில் எழுத்தாளரும் தொலைக் காட்சி தொகுப்பாளருமான ஈரோடு மகேஷ், அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வர் ஜி.ரங்கநாத், காவேரி மருத்துவமனை செயல் இயக்குநர் விஜயபாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;