நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசா, ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான அருணாவிடம் புதனன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதில், அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.