districts

img

வண்டல் மண் எடுக்க அனுமதி தர காலதாமதம் உடுமலையில் விவசாயிகள் போராட்டம்

உடுமலை, ஜூலை 18 - வண்டல் மண் எடுக்க அனுமதி  கொடுக்க காலதாமதம் செய்யும் வரு வாய்த்துறை அதிகாரிகளை கண்டித்து  வியாழனன்று உடுமலை வட்டாட்சி யர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினார் கள்.

உடுமலை பகுதியில் விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்க அரசு  அனுமதி வழங்கிய நீர்நிலைகளில் இருந்து மண் எடுக்க வருவாய்த்துறை அதிகாரிகள் அனுமதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக விவசாயிகள்  புகார் தெரிவித்தனர்.  இப்பிரச்சனை யில் எவ்வித நடவடிக்கையும் இல் லாத நிலையில் விவசாயிகள் உடு மலை வட்டாட்சியர் அலுவலத்தை முற் றுகையிட்டு போராட்டம் நடத்தினார் கள்.

இது குறித்து போராட்டத்தில்  ஈடுபட்ட விவசாயிகள் தெரிவிக்கையில், உடுமலைப்பேட்டை தாலுகாவில் தமி ழக அரசு விவசாயிகளுக்கும், மண் பாண்ட தொழிலாளர்களுக்கும் நீர்நி லைகளில் இலவச வண்டல் மண், சவுடு  மண் எடுத்துக் கொள்ள அரசாணை பிறப்பித்திருந்தும் உடுமலை வட்டாட்சி யர் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வந்தார். இதை கடந்த 15 ஆம் தேதி யன்று வட்டாட்சியரிடம் தரப்பட்ட மனு வில், விவசாயிகளை வஞ்சிக்கும் வகை யில் வேண்டுமென்றே காலதாமதம் ஏற் படுத்தினால் விவசாயிகள் வட்டாட்சி யர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு  போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறியிருந்தனர்.

எனினும் வட்டாட்சியர் உரிய நடவ டிக்கை எடுக்காத நிலையில் வண்டல் மண் எடுக்க ஆன்லைனில் பதிவு செய்த  அனைத்து மனுக்களும் நிராகரிக்கப் பட்டது. மனுகள் நிராகரிப்பு குறித்து வட் டாட்சியர் அலுவலகத்தில் விவசாயி கள் கேட்டபோது வருவாய்துறை அதி காரிகள் முறையற்ற பதில் சொல்லிய தால் போராட்டம் நடத்துகிறோம் என்று   கூறினார்கள்.

பின்னர் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும்  வருவாய்துறை அதிகாரிகள் விவசாயி களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் கள். இதில் வண்டல்மண் எடுக்க பதிவு  செய்த விவசாயிகளின் மனுகள் உரிய முறையில் ஆய்வு செய்யப்படும் என்று  அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.