districts

மக்களைத்தேடி மருத்துவர்களுக்கு ஊதிய நிலுவை

ஈரோடு, ஜுன் 13- மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் மகளிர் சுகாதார தன்னார்வலர் களுக்கு ஊதிய நிலுவை இருப்பதாகப் புகார்  எழுந்துள்ளது.

தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ், மருத்து வம் - மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலமாக தொற்றா நோய்களை கண்டறிவதற்காக மக்களை தேடி மருத்துவம் திட்டம் செயல் படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் சுய உத விக் குழு உறுப்பினர்களை மகளிர் சுகாதார தன்னார்வலராக நியமித்து இம்மருத்துவத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கிராமப்புற  மற்றும் நகர்ப்புரங்களில் முறையே 8,713  மற்றும் 2,256 மகளிர் சுகாதார தன்னார்வ லர்கள் துணை சுகாதார மையங்களுடன் இணைக்கப்பட்டு செயல்படுகின்றனர்.

மகளிர் சுகாதார தன்னார்வலர்கள் இளஞ் சிவப்பு நிற மேலாடையுடன் வீடுகளுக்கே சென்று தொற்றா நோய்களை கண்டறிவர். பாதிப்புள்ளவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் நாள்பட்ட நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்கி வரு கின்றனர். ஒவ்வொரு தன்னார்வலரும் மாதந் தோறும் 200க்கும் மேல் வீடுகள் சென்றிருக்க வேண்டும். திட்டத்தின் தொடக்கத்தில் உயர்  ரத்த அழுத்தம், நீரிழிவு பிரச்சனை இருப் போரை சோதித்து வந்தனர்.  பின்னர் கூடுத லாக மூன்று வகையான புற்று நோய் சோதனை, காச நோய், தொழு நோய் பற்றிய  பரிசோதனைகளையும் செய்து வருகின்ற னர். அதில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய  மருந்து மாத்திரைகள் அளிப்பதோடு, ஆரம்ப  சுகாதார நிலையங்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். அதுமட்டுமின்றி மன நோய்கள் பற்றிய சோதனைகளை செய்ய வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் மூன்று வகையாக மதிப்பீடுகள் செய்யப்பட்டு ஊதி யம் வழங்கப்படுகிறது. இவ்வாறு மாதம் ரூ.4 ஆயிரம் முதல் 550 வரை ஊதியம் வழங்கப்ப டுகிறது.

இத்திட்டம் தமிழக அரசின் பெயர் சொல் லும் திட்டமாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இத்திட்டத்தில் பணியாற்றும் தன் னார்வலர்கள் பலருக்கு ஈரோடு மாவட்டத் தில் கடந்த சில மாதங்களாக ஊதியம் வழங் கப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந் துள்ளது. வீடு தேடி மருத்தும் பார்க்கும் எங்க ளுக்கு அரசு ஊதியத்தை நிலுவையில் வைத் துள்ளது. உடனடியாக இதனை விடுவிக்க  வேண்டும் என இத்திட்டத்தில் பணியாற்றும்  தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.