districts

img

வடமாநில இளைஞர்களால் பாலியல் வன்கொலை செய்யப்பட்ட மீனவப் பெண்ணின் குடும்பத்தினருக்கு நிவாரணம், வேலை வழங்கக் கோரி சிபிஎம் போராட்டம்

இராமநாதபுரம், ஜூன் 12-  இராமேஸ்வரம் வடகாடு பகுதி யில் வடமாநில இளைஞர்களால் பாலியல் வன்கொலை செய்து எரிக்  கப்பட்ட மீனவப்பெண்ணின் குடும்  பத்தினருக்கு நிவாரணம், வேலை வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ஜூன் 11  அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  பாலியல் வன்கொலை செய்த வட மாநில இளைஞர்களுக்கு கடும்  தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவப்  பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.25  லட்சம் நிவாரணம் மற்றும் குடும்பத்தில்  ஒருவருக்கு அரசு வேலை, வீடு  கட்டித்தர வேண்டும். இரா மேஸ்வரம் தீவு முழுவதும் சட்டவிரோத மாக இயங்கும் இறால் பண்ணைகளை மூட வேண்டும். மீனவப் பெண்ணுக்கு ஆதரவாக நியாயம் கேட்டு போராடிய வர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று இராமேஸ் வரம் பேருந்து நிலையம் அருகில் நடை பெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு கட்சியின் தாலுகாச் செயலாளர் ஜி.சிவா தலைமை வகித்தார். கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினரும் கட்சியின் மாநிலக்  குழு உறுப்பினருமான எம். சின்னத்துரை, மாவட்டச் செயலாளர் வி. காசிநாததுரை ஆகியோர் உரையாற்றினர். மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.கருணாகரன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஜஸ்டின் மற்றும்  ஆரோக்கிய நிர்மலா, பாதிக்கப்பட்ட  மீனவப்  பெண் குடும்பத்தினர் ஆகியோர் பேசினர். ஏரகாடு நாகசாமி, சுப்பிர மணி, சரவணன், வடகாடு செல்வம்,  உமயவேல் மற்றும் கட்சியின் தாலு காக் குழு உறுப்பினர்கள் அசோக்,  மணிகண்டன், ஜேம்ஸ் ஜஸ்டின், ஞானசேகர், ராமச்சந்திர பாபு உட்பட பெருந்திரளானோர் பங்கேற்றனர். சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத் துரை பேசுகையில், இராமேஸ்வரத் தில் மீனவப் பெண் ணின் படுகொலை யில் சம்பந்தப் பட்ட வடமாநில  இளைஞர்கள் கடுமையாக தண்டிக்கப் பட வேண் டும். சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இறால்  பண்ணைகளைமூட வேண்டுமென  சட்டமன்றத்தில் ஏற்கனவே வலியுறுத் திப் பேசியுள்ளோம். ஆனால் சட்ட விரோதமான இறால் பண்ணை  இங்கு இயங்கியுள்ளது. குறைந்த  கூலிக்காக வட மாநில இளை ஞர்களை இங்குள்ள முதலாளி கள் வேலைக்கு வைக்கிறார்கள். சந்தேகத் திற்குரிய வடமாநில இளைஞர்கள்  நடமாட்டம் குறித்து மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். இராமேஸ் வரம் போன்ற சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் இடங்களில் இது மிகவும் அவசியமாகும். இராமேஸ்வரத்தில் மக்கள் ஒற்றுமையுடன் அமைதியாக வாழ்ந்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாடுபட்டு வருகிறது என்று தெரி வித்தார். மாரி நன்றி கூறினார்.

;