districts

‘எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்’ குருவாலப்பர்கோவில் மக்கள் ஆட்சியரிடம் மனு

அரியலூர், ஏப்.30- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள குருவாலப்பர் கோவில் ஊராட்சிக்குட்பட்ட கொக்கரனை கிராமத்தில்  பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த 59 குடும்பங் கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றன.  இவர்கள் ஓட்டு வீடு, மாடி வீடு, கூரை  வீடு, சீட்டு வீடு என கட்டி மின்சார அலுவல கத்தில் மின் இணைப்பு பெற்று கடந்த 2005  ஆம் ஆண்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி  மூலம் புதிய குடிநீர் வசதி பெற்று முறையாக  வசித்து வருகின்றனர்.  ஜெயங்கொண்டம் பாசன பிரிவு உதவி பொறியாளர் ராஜா சிதம்பரம் என்பவர், தாங்கள் குடியிருந்து வரும் இப்பகுதி நீர்வள  ஆதார அமைப்பிற்குரியது என கருதுவதால் 21 நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற் றும்படி வீடுகளில் நோட்டீஸ் ஒட்டியுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனை கண்டித்து அப்பகுதி பொது மக்கள், குருவாலப்பர் கோயில் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் கமலா தலை மையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். அப்போது, தங்க ளின் வீடுகளை இடித்தால், நாங்கள் தங்குவ தற்கு வேறு இடம் இல்லை. மாவட்ட ஆட்சி யர் இல்லத்தில்தான் வந்து தங்க நேரிடும். எனவே மாவட்ட நிர்வாகம் மாற்று இடம் வழங்கி, எங்களின் வாழ்க்கையை பாது காக்குமாறு தெரிவித்தனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச்  செயலாளர் இளங்கோவன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் மணிவேல், ஜெயங்கொண் டம் ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம், குருவாலப்பர் கோயில் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் கமலா, கிளை துணைத் தலைவர் மணிமேகலை, செயலாளர் அன்பழ கன், துணை செயலாளர் சீனிவாசன், பொரு ளாளர் வள்ளி உள்ளிட்டோர் ஜெயங்கொண் டம் துணை வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு  அளித்தனர்.

;