districts

செங்குந்தபுரம் பகுதி மக்களின் கோரிக்கைகளை 30 நாட்களுக்குள் நிறைவேற்ற ஆட்சியர் அறிவுறுத்தல்

அரியலூர், ஏப்.11- அரியலூர் மாவட்டம் செங்குந்தபுரம் கிராம மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர்  நிரந்தரமாக தட்டுப்பாடின்றி கிடைத்திட புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்  டும். 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட  இரண்டு நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும். கொள்ளிடம் கூட்டு குடிநீர் வழங்க நீர் உந்து நிலையம் அமைக்க வேண்டும்.  10 ஆண்டுகளுக்கு முன்பு தெருக் களுக்கு போடப்பட்ட தார்ச் சாலைகள் சிதில மடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. அதனை சீரமைத்து புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும். தெருவிளக்கு, மழை நீர் வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த மார்ச் 26  முதல் ஏப்.3 வரை பிரச்சார இயக்கமும், கை யெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது. பொதுமக்களிடம் கையெழுத்து பெற்ற  படிவத்துடன் கோரிக்கை மனுக்கள் கடந்த  ஏப்.5 அன்று ஜெயங்கொண்டம் நகராட்சி  ஆணையர் மூர்த்தியிடமும், ஜெயங் கொண்டம் வட்டாட்சியர் துரையிடமும் அளிக்கப்பட்டன. மேலும் ஏப்.10 மனுநீதி நாளன்று அரிய லூர் சென்று, மாவட்ட ஆட்சியரிடம் பொது மக்களிடம் கையெழுத்து பெற்ற படிவத்து டன் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கோரிக்கை மனுவை  ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையரி டம் அளித்து, மனுவில் கேட்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைகளையும், 30 நாட்களுக்குள் செய்து முடித்து மாவட்ட  ஆட்சியருக்கு பதில் அறிக்கை அனுப்பி  வைக்க வேண்டுமென அறிவுறுத்தியுள் ளார்.  பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று 30 நாட்களுக்குள் செய்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்திய மாவட்ட ஆட்சியர் மற்றும் கோரிக்கைகளை 30 நாட்களில் செய்து முடிப்பதாக ஒப்புதல் அளித்த நகராட்சி ஆணையருக்கு அப் பகுதி பொதுமக்கள் மற்றும் சிபிஎம் சார்பில் நன்றி தெரிவித்துள்ளனர்.

;