districts

img

இடிந்து விழும் நிலையில் தொகுப்பு வீடுகள் புதிய வீடு கட்டித் தர மக்கள் கோரிக்கை

அரியலூர், நவ.24- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வங்குடி ஊராட்சிக்குட்பட்ட நரசிங்கம்பாளையம் கிரா மத்தில் சுமார் 40-க்கும் மேற் பட்ட இருளர் இனத்தைச் சேர்ந்த பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு 22 குடும்பங்கள் வசித்து  வந்த நிலையில், அவர்  களுக்கு இட ஒதுக்கீடு செய்து அரசு சார்பில் கான்கி ரீட் வீடுகள் கட்டிக் கொடுக் கப்பட்டது. இந்த வீடுகள் அனைத் தும் பழுதடைந்து சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் ஆங் காங்கே நீட்டிக் கொண்டு உள்ளன. இதனால் மழைக் காலங்களில் வீடுகள் ஒழு கும் நிலை ஏற்பட்டுள்ளது.  எனவே, இருளர் இன மக்  கள் நெல் மூடுவதற்கு பயன்  படுத்தக்கூடிய படுதாவை மேற்கூரை பரப்பில் விரித்து போட்டு வைத்துள்ளனர்.  இதுகுறித்து அப்பகுதி யைச் சேர்ந்த இருளர் இன மக்கள் கூறும்போது, தாங் கள் இந்தப் பகுதியில் குடி யேறியதில் இருந்து அரசு  எங்களுக்கு எந்த சலுகை களையும் செய்ய முன்வர வில்லை.  இடங்கள் கூட ஒதுக்கி தராத நிலையில் வீடுகளை கட்டிக் கொடுத்து எங்க ளுக்கு பட்டா மாற்றம் செய்து  கொடுக்கவில்லை. இத னால் எங்களால் எதையுமே செய்ய முடியவில்லை. இது குறித்து மாவட்ட ஆட்சியரி டம் பலமுறை மனு கொடுத்  தும் எந்தவித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தனர்.

;