districts

img

புதிய கட்டுருவாக்கப் பணிமனைகள் கட்டுமானப் பணிகளை அமைச்சர் சிவசங்கர் தொடக்கி வைத்தார்

அரியலூர், செப்.25 - அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.7.46 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டுருவாக்கப் பணிமனைகள் கட்டுவதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த இரு தொழிற்பயிற்சி நிலையங் களில், பொதுப் பணித்துறை சார்பில் நடை பெற்ற பூமி பூஜையில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவ சங்கர், தலா ரூ.3.73 கோடி என மொத்தம் ரூ.7.46 கோடி மதிப்பீட்டில் இரண்டு புதிய கட்டுருவாக்கப் பணிமனைகள் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி, சட்டப் பேரவை உறுப்பி னர்கள் அரியலூர் கு.சின்னப்பா, ஜெயங் கொண்டம் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேருந்து சேவை தொடக்கம்
பின்னர் செந்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்கு வரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், செந்துறையில் இருந்து அரியலூர், குன்னம்,  பெரம்பலூர், துறையூர், நாமக்கல் வழியாக  சேலத்துக்கு பேருந்து சேவையை கொடி யசைத்து தொடக்கி வைத்தார். தொடர்ந்து அய்யூர் துணை மின் நிலையத்தில் இருந்து  புக்குழி கிராமத்துக்கு மின் விநியோகத்தை இயக்கி வைத்தார்.

;