districts

img

தா.பழூர் - சுத்தமல்லி பிரிவு சாலையில் உள்ள மதுக்கடையை அகற்ற மாதர் சங்கம் கோரிக்கை

அரியலூர், ஜூலை 27 - அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அரியலூர் மாவட்ட 8-வது  மாநாடு தா.பழூர் ஒன்றியத்தில் நடை பெற்றது.  கொடிகளை ஏந்தி கடைவீதியின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வல மாக வந்து, அண்ணா சிலை அருகே அமைக்கப்பட்டு இருந்த மேடையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சி க்கு முன்பு ராஜேஸ்வரி கொடியேற்றி னார். மாவட்டத் தலைவர் பாக்கியம் தலைமை வகித்தார். மாநில தலைவர் வாலண்டினா சிறப்புரையாற்றினார்.  மாவட்ட துணைத் தலைவர் மீனா  வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் ராணி துவக்க உரையாற்றி னார். மாவட்டச் செயலாளர் பத்மாவதி வேலை அறிக்கை சமர்ப்பித்தார். மாவட்ட பொருளாளர் அம்பிகா வரவு-செலவு அறிக்கை வாசித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் சசிகலா, கீதா வாழ்த்துரை வழங்கினர். 15 பேர் கொண்ட புதிய மாவட்டக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. மாவட்டத் தலைவராக பி.பத்மாவதி, மாவட்டச் செயலாளராக டி.அம்பிகா, மாவட்டப் பொருளாளராக ஜெ.துர்கா உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் தேர்வு  செய்யப்பட்டனர். புதிய நிர்வாகி களுக்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மணிவேல், கே. மகாராஜன், வி.பரமசிவம், ஜெ.ராதா கிருஷ்ணன் ஆகியோர் சால்வை அணி வித்து பாராட்டினர். தமிழக அரசு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை நிறுத்தியதை மறுபரிசீலனை செய்து  மீண்டும் தொடர ஏற்பாடு செய்ய வேண்டும். சுத்த மல்லி பிரிவு ரோட்டில் மக்கள் குடியிருப்பு  அதிகம் உள்ள பகுதியில், டாஸ்மாக் கடை இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் டாஸ்மாக் கடையை அகற்றி மாற்று இடத்தில் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கொள்ளிட குருவாடி தலைப்பில் தடுப்பணை கட்டி விவசாயிகள் பயன் பாட்டிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தா.பழூர் தலைநகரில் ஏழை - எளிய மாணவர்கள் குறைந்த சலுகையில் கல்வி பெற அரசு கலைக் கல்லூரி உரு வாக்க வேண்டும். ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சாரதா நன்றி கூறினார்.

;