districts

மாற்றுத்திறனாளிகள் பேட்டரி சக்கர நாற்காலி பெற விண்ணப்பிக்கலாம்

அரியலூர், மே 14 - மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அரியலூர் மாவட்டத்தில் தசைசிதைவு நோய்  மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோ ருக்கான பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர  நாற்காலி, இணைப்பு சக்கரம் பொருத்தப் பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்  பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. இதில் தசை சிதைவு நோய் மற்றும்  முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக் கான பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர  நாற்காலி, இணைப்பு சக்கரம் பொருத்தப் பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் (18 வயதிற்கு மேற்பட்ட இரு கால்கள் பாதிக்கப்பட்டு, இரு  கைகள் நல்ல நிலையில் உள்ளோர் மட்டும்),  முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவ மைக்கப்பட்ட இணைப்பு சக்கரம் பொருத்தப் பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் (18 வயதிற்கு மேற் பட்டோர்) வழங்கப்பட உள்ளது.  எனவே தகுதியுடைய மாற்றுத்திறனாளி கள் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல் மற்றும்  தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை  நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை  நகல், பணிச்சான்று (கல்லூரி பயில்பவரா யின் படிப்பு சான்று, சுயத்தொழில் புரிபவரா யின் சுயதொழில் புரிவதற்கான சான்று) மார்பளவு புகைப்படம்-2 ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவல கம், அறை எண்:17, தரைத்தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், அரியலூர் - 6 21704-ல் மே 19 அன்று காலை 10 மணிக்கு நடை பெறும் பயனாளிகள் தேர்வு முகாமில் கலந்து  கொள்ளவும்.  மேலும் விவரங்களுக்கு 04329-228840  எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையு மாறு மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி  தெரிவித்துள்ளார்.

;