districts

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி அரசு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

அரியலூர், ஏப்.21- அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை, திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு, நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே நிறை வேற்ற வேண்டும் என வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் புதன்கிழமை தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில்  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை கொண்டு வர வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவி யாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், எம்ஆர்பி செவிலியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு  காலமுறை ஊதியம் பெறும் மூன்றரை  லட்சம் பேருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் இறந்த அரசு ஊழியரின்  குடும்பத்திற்கு கருணை அடிப்படை யில் பணி நியமனம் வழங்க வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, உணவு இடைவேளையின் போது, இந்த கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண் டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க  மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட் டம் தாலுகா அலுவலகம் முன்பு நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கருவூலத் துறை, நெடுஞ்சாலைத்துறை, ஊரக  வளர்ச்சித் துறை, சத்துணவு துறையைச்  சேர்ந்த ஊழியர்கள் உள்ளிட்ட கலந்து கொண்டனர். 

திருச்சிராப்பள்ளி
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க திருச்சி மாவட்டம் சார்பில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதனன்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் பாரதி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பழனிச் சாமி, தலைவர் பால்பாண்டி, மாநில துணைத் தலைவர் பெரியசாமி ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசி னர்.

தஞ்சாவூர்
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத் திற்கு, மாவட்ட துணைத் தலைவர் ஜோதி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பாஸ்கரன், மாநிலச் செய லாளர் எஸ்.கோதண்டபாணி ஆகி யோர் உரையாற்றினர்.  பனகல் கட்டிடத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, வடக்கு வட்டத்  தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். வடக்கு வட்டச் செயலாளர் அஜய்ராஜ் கோரிக்கை விளக்க உரை யாற்றினார். சாலைப் பணியாளர் சங்க மாநில செயலாளர் கே.பழனிசாமி, மாநில  மகளிர் குழு உறுப்பினர் செல்வி, மாநி லச் செயலாளர் எஸ்.கோதண்டபாணி, வேளாண் துறை அமைச்சு பணியாளர் சங்கம் ஆர்.பன்னீர்செல்வம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஆவணத்தில் உள்ள பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் எஸ். மகேஷ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சிவ. ரவிச் சந்திரன் கோரிக்கை விளக்க உரை யாற்றினார்.  இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களி லும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

;