districts

கார்ப்பரேட் கறிக் கோழி நிறுவனங்களை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

அரியலூர், மே .17 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு அரியலூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்ட கறி கோழி வளர்ப்பு விவ சாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி னர். 2013 ஆம் ஆண்டு  பின்தங்கிய மாவட்டங்க ளான அரியலூர், கடலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒன்றிய அர சின் சார்பில் 25 சதவீத மானிய மும், மாநில அரசின் சார்பில் 25 சதவீத மானியமும் நிதி வழங்குவதாக அறிவித்து கோழி வளர்ப்பில் ஈடு படுத்தி உள்ளனர். இந்த மானியத்தை மாநில  அரசு வழங்கிய நிலையில்,  ஒன்றிய அரசு வழங்க வில்லை. இதனை கண்டித் தும், உடனே வழங்க கோரி யும் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.  அதேபோல் 2013 ஆம்  ஆண்டு நடைபெற்ற கூட்டத் தில் ஆண்டுக்கு ஒரு கிலோ வுக்கு 1 ரூபாய் கூடுதலாக  வழங்குவதாக அறிவித்தி ருந்தனர். ஆனால் கடந்த 8  ஆண்டுகளுக்கு மேல் ஆகி யும்  பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்ந்த போதும்,  கறி கோழி வளர்ப்புக்கு 6.50  ரூபாய் என்பதை 12 ரூபா யாக உயர்த்தி, கோழிக்குஞ்சு வளர்க்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாது காக்க ஒன்றிய-மாநில அரசு கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட தனியார்  நிறுவனங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக முடிவு எடுக்க வேண்டும். கறி  கோழிக்கு உற்பத்தி விலையை உயர்‌த்தி வழங் காத கார்ப்பரேட் கறிக்கோழி நிறுவனங்களை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட கறி கோழி வளர்ப்பு விவசாயிகள் கலந்து கொண்டனர்.

;