அரியலூர், ஏப்.24 - அறிவுசார் சொத்துக் களான புத்தகங்களைப் பாது காக்கும் வகையிலும் அவற்றை வளர்க்கும் நோக்குடனும் யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டுதோறும் ஏப்ரல் 23 ஆம் தேதியை உலகப் புத்தக தினமாகக் கொண்டாடுகிறது. உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாக விளங்கும் இந்நாள், 1995 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்ட லோனியாவில்தான் முதன் முதலில் கொண்டாடப் பட்டது. தலைசிறந்த இலக்கியவாதியான வில்லி யம் ஷேக்ஸ்பியர் பிறந்தது மட்டுமல்ல; உலகைவிட்டு மறைந்ததும் ஏப்ரல் 23 ஆம் தேதிதான். அரியலூர் மாவட்ட நூலக ஆணைக் குழுவின் கீழ் இயங்கும் ஜெயங்கொண் டம் முழுநேர கிளை நூல கத்தில் உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக நூலகர் கொளஞ் சிநாதன் வரவேற்றார். ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளி தலை மையாசிரியர் ராஜகுமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர் விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி பேராசிரியர் சிவ ராமன் சிறப்புரையாற்றினார். விழாவில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
பேராவூரணி
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி கிளை நூலகத் தில் உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது. இதில், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, பாட்டுப் போட்டி, கதை சொல்லுதல், புத்தகக் கண்காட்சி ஆகியவை மாண வர்களுக்கு நடத்தப்பட் டன. வெற்றி பெற்ற மாண வர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன. நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை வீரர் முரு கையன், இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலர் பி.கிருஷ்ணவேணி மற்றும் வாசகர்கள் கலந்து கொண்ட னர். புதிதாக இருபது உறுப் பினர்கள், இரண்டு புரவ லர்கள் சேர்க்கப்பட்டனர்.
குருவிக்கரம்பை
சேதுபாவாசத்திரம் ஒன்றி யம் குருவிக்கரம்பை கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா ஊராட்சி மன்ற தலைவர் வைரவன் தலை மையில் நடைபெற்றது. நூலகர் ஸ்ரீவெங்கட்ரமணி வர வேற்றார். புத்தக வாசிப்பு தொடர்பாக பள்ளி மாண வர்களுக்கு பேச்சுப் போட்டி, ஓவியப்போட்டி, கதை சொல்லுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கு திருக்குறள் பரிசாக வழங்கப்பட்டது. விழாவில் கிராமத்தினர், வாசகர் வட்டத்தினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பரணி பார்க் மாணவர்கள்
உலக புத்தக தினத்தை முன்னிட்டு மாணவர்களுக் கான சுயமுன்னேற்ற பயிற்சி வகுப்பினை பரணிபார்க் கல்வி குழுமம் மற்றும் பொது நூலகத்துறை கரூர் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்தி னர். மேலும் பரணிபார்க் கல்விக் குழும மாணவர்கள் 1000 பேர் மாவட்ட மைய நூலக உறுப்பினர்களாக இணைந்தனர். ஈரோடு எழுத்தாளர் கதிர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களை ஊக்குவித்தார். பரணி பார்க் கல்வி குழுமத்தின் தாளாளர் மோகனரங்கன் தலைமை வகித்தார்.