விருதுநகர், டிச.6- விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம், குறை யறைவாசித்தான் பகுதியில் போதுமான மழையின்றி நெற்பயிர்கள் கருகி வருகின் றன. பாதிக்கப்பட்ட விவ சாயிகள் நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத் துள்ளனர். திருச்சுழி வட்டம், நரிக் குடி ஒன்றியத்திற்கு உட்பட் டது அகத்தாகுளம், சில்லங் குடி, முத்தனேரி, கொங்கலா குடி, சிட்டவண்ணான்குளம், குறையறைவாசித்தான், புளியங்குளம் ஆகிய கிரா மங்கள் உள்ளன. இங்குள்ள விவசாயிகள், கடந்த சில மாதங்களில் பெய்த மழை காரணமாக சுமார் ஆயிரம் ஏக்கரில் நெல் நடவு செய்தி ருந்தனர். ஆனால் பருவமழையா னது, தொடர்ந்து இப்பகுதி யில் மட்டும் சரியாக பெய்ய வில்லை. இதன் காரணமாக, நன்கு வளர்ந்து வந்த நெற் பயிர்கள், தண்ணீரின்றி கரு கத் தொடங்கி விட்டது. இத னால், விவசாயிகள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், மழை யின்றி பாதிக்கப்பட்ட நெற் பயிர்களை, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் நிர்வாகி கள் நேரில் சென்று பார்வை யிட்டனர். மேலும், பாதிக்கப் பட்டுள்ள விவசாயிகளுக்கு முழு நிவாரணம் மற்றும் இன் சூரன்ஸ் வழங்க உரிய ஏற் பாடு செய்திட வேண்டுமென திங்களன்று மாவட்ட ஆட்சி யர் ஜெ.மேகநாதரெட்டி யிடம் மனு அளித்துள்ளனர்.