திருவண்ணாமலை, ஜூலை 7- கெரோனா பொது முடக்கத்தால் வறுமையில் வாடும் கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு, நிவா ரணம் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் கோரிக்கை மனுக் கள் அளிக்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டத்தில் நெல், கரும்பு, மனிலா உள்ளிட்ட பயிர்கள் அதிகமாக சாகுபடி செய்யப் படுகிறது. அதில் கரும்பு பிர தான பயிராக உள்ளது. செய்யாறு, மூங்கில்துரைப் பட்டு பகுதிகளில் இரண்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை களும், போளூர், தண்டராம் பட்டு பகுதிகளில் 2 தனியார் சர்க்கரை ஆலைகளும் உள்ளன. இதனால் மாவட்டத்தில் கரும்பு வெட்டும் தொழில் பிரதான பணியாக இருக்கி றது. மாவட்டத்தில் பாவுப் பட்டு, பறையம்பட்டு, தச்சம் பட்டு, சின்னகல்லபாடி உள்ளிட்ட பல்வேறு கிரா மங்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் கரும்பு அறுவடை காலங்களில் சுற்றுவட்டார கிராமங்களில் தங்கி கரும்பு வெட்டும் பணியில் ஈடுபவர். இந்நிலையில், தொற்று பரவலை தடுக்க பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட தால் கரும்பு வெட்டும் தொழி லாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டள்ளது. அக்கம் பக்கம் கடன் வாங்கி தங்கள் குடும்பத்தை காப்பாற்றி வரு கின்றனர். எனவே கரும்பு வெட்டும் தொழிலாளர் களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு கரும்பு வெட்டும் தொழிலா ளர்கள் சங்க மாநிலப் பொரு ளாளர் கே.வெங்கடேசன், செயலாளர் சொக்கநாதன், விவசாய தொழிலாளர் சங் கத்தின் மாவட்டச் செய லாளர் எம்.பிரகலநாதன் தலைமையில் விவசாயிகள், செவ்வாயன்று (ஜூலை 7) மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் 500க்கும் மேற்பட்ட மனுக்களை அளித்தனர்.