விருதுநகர், மார்ச் 30- விருதுநகர் நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஓய்வு பெறும் நாளிலேயே பணப் பலன் களை வழங்கிட வேண்டுமென நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். விருதுநகர் நகராட்சி சாதாரணக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் மாதவன் தலைமை யில் நடைபெற்றது. இதில், சட்டமன்ற உறுப் பினர் சீனிவாசன், ஆணையாளர் சையது முஸ்தபா கமால், பொறியாளர் மணி உட்பட நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர். இதில், வரும் ஆண்டிற்கான வரவு செலவு குறித்த உத்தேச மதிப்பீடு குறித்து மன்றத்தில் ஒப்புதல் கேட்டு தீர்மானம் வைக் கப்பட்டது. அப்போது குறுக்கிட்டு பேசிய நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார், பாட்ஷா ஆறுமுகம் ஆகியோர் பட்ஜெட் நகல் ஏதும் வழங்காமல் ஒப்புதல் கேட்பது முறையாகாது. எனவே இத்தீர்மானத்தை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். நகராட்சியில் தேவையற்ற தளவாட சாமான்கள் வாங்கி நிதி இழப்பை ஏற் படுத்த வேண்டாம் எனவும், ஓய்வுபெற்ற நகராட்சி ஊழியர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு பணப் பலன்களை ஏன் தற்போது வரை வழங்காமல் உள்ளீர் கள் என சிபிஎம் நகர்மன்ற உறுப்பினர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நகராட்சித் தலை வர், நான் பொறுப்புக்கு வந்தவுடன் ஓய்வு பெற்றவர்களுக்கு எவ்வளவு பாக்கி உள்ளது எனக் கேட்டேன்.
அதற்கு ஆணையாளர் ரூ.3 கோடி வரை பாக்கி உள்ளது என தெரி வித்தார். நகராட்சி சார்பில் போடப்படும் தெரு விளக்குகள் ஒரே நாளில் பழுதடைந்து விடு கின்றன. பல்புகள் தரமானதாக இல்லை. எனவே புதிய ஒப்பந்ததாரர் மூலம் பணி களை செய்ய வேண்டும். தரமான பல்புகளை வாங்க வேண்டும் என நகர்மன்ற உறுப்பினர் முத்துராமன் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த பொறியாளர், இந்த கால நீட்டிப்பு ஒப்பந்தம் வெறும் மூன்று மாதங்கள் மட்டுமே. நகராட்சி நிர்வாக இயக்குனரிடம் இருந்து ஒப்புதல் வந்தவுடன் புதிய டெண்டர் விடப்படும். மாநிலம் முழு வதும் ஒரே மாதிரியான கூலி வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்தார். அம்மா உணவகத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு இரு மாதங்களாக ஊதியம் ஏன் வழங்கவில்லை. மேலும், பி.எப் தொகையை மாதந்தோறும் தொழி லாளர்களே செலுத்த வேண்டுமென கூறப் படுகிறது. எனவே, உடனடியாக ஊதியத்தை வழங்க வேண்டுமென நகர்மன்ற உறுப்பினர் வெங்கடேஷ் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த தலைவர், ஒரு மாத சம்பளம் உடனே வழங்க நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. மீதமுள்ள சம்பளம் விரை வில் வழங்கப்படும் எனக் கூறினார். கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடும் தொழி லாளர்கள் மூலம் புகை மருந்து எங்குமே அடிக்கப்படவில்லை. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.
எனவே, பணிகள் முடிவடைந்தவுடன் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள கவுன்சிலரிடம் கையொப் பம் பெற வேண்டும் எனவும் உறுப்பினர்கள் சிலர் தெரிவித்தனர். 25 வார்டுகளில் உப்பு சுவையுள்ள குடி நீர் தான் பொதுமக்களுக்கு வழங்கப்படுகி றது. மற்ற பகுதிகளில் தாமிரபரணி தண்ணீர் வழங்கப்படுகிறது. ஏன் இந்த பாரபட்சம் என சிபிஎம் நகர்மன்ற உறுப்பினர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சட்டமன்ற உறுப்பி னர், ஆனைக்குட்டத்தில் உள்ள குடிநீரின் சுவை மாறி விட்டது. இதேபோல் அருப்புக் கோட்டை நகராட்சிக்கு வரும் வைகை குடி நீரின் சுவையும் மாறிவிட்டது. எனவே இரு ஊர்களுக்கு வரும் தண்ணீரையும் சுத்தி கரிக்க பிளாண்ட் போடலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார் என்று கூறினார். நகராட்சி பள்ளிகளை சுத்தம் செய்ய ஆட்களை அனுப்பாமல் பல லட்சம் ரூபாய் வரை முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக நகர்மன்ற உறுப்பினர் முத்துலட்சுமி புகார் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த சட்டமன்ற உறுப்பினர், ஏற்கனவே இருந்த நிர்வாகத்தி னர் இதுபோன்ற தவறுகளைச் செய்துள்ள னர். இனி தவறுகள் நடைபெறாது என் றார்.