districts

img

வெம்பக்கோட்டை அகழாய்வு: சுடுமண் புகை பிடிப்பான் கருவி கண்டெடுப்பு!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகழாய்வில் 2 சுடுமண் முத்திரை மற்றும் சுடுமண் புகை பிடிப்பான் கருவியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில், முதல் கட்ட அகழாய்வு பணியில், சுமார் 3,254 பொருள்கள் கண்டெடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதை அடுத்து இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதுவரை 15 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இங்கிருந்து சுடுமண்ணாலான புகைப்பிடிப்பான், பெரிய தட்டு, தக்களி பானை, தோசைக்கல், இலை வடிவிலான அச்சு உள்ளிட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி, சங்கு கலைப் பொருள்கள் உற்பத்திக் கூடத்தில் பயன்படுத்தப்பட்ட கருப்பு, வெள்ளை நிறத்துடன் கூடிய சதுரம், உருண்டை வடிவிலான மெருகூட்டும் கற்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட சல்லடை, பானை உள்பட 10-க்கும் மேற்பட்ட தொல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
நேற்று 3 கிராம் எடைக்கொண்ட 40% தங்கம் மட்டுமே பயன்படுத்தப்பட்ட  தங்கத் தாலி கண்டெடுக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று 2 சுடுமண் முத்திரை மற்றும் சுடுமண் புகை பிடிப்பான் கருவியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.