வேலூர், மார்ச் 11 - வேலூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி மற்றும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் தலைமையில் சனிக்கிழ மையன்று (மார்ச் 11) மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநகராட்சிக் கட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு நிலையான நகர்ப்புற அபி விருத்தி திட்டம் மற்றும் 15ஆவது நிதிக்குழு மானிய திட்டம் போன்ற பல்வேறு திட்டங்க ளின் கீழ் நடைபெற்று வரும் சாலைகள் மற்றும் கான்கிரீட் ஃபேவர் பிளாக் அமைக்கும் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. நாள்தோறும் திடக்கழிவு களை தூய்மை பணியாளர்களின் மூலம் சேகரித்து இயற்கை உரங்களாக மறுசுழற்சி செய்தல், பூங்காக்கள் மற்றும் விளை யாட்டு திடல்களை பரா மரித்தல், 10 நகர்ப்புற சுகா தார நிலையங்களில் பொது மக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், மாநக ராட்சி நீர்த்தேக்க தொட்டிகளை தூய்மையாக பராமரிப்பது, மாண வர்களின் கற்றல் திறன் ஆசிரி யர்களின் கற்பிக்கும் திறனை மேம்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகியவை ஆலோசித்தனர். இந்தக் கூட்டத்தில் துரை முருகன் பேசுகையில்,“ வேலூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் நான்கு கட்டங்க ளாக செயல்படுத்த திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வரு கின்றன. இப்பணிகளை ஒப்பந்த காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும்”என்றார். அம்ருத் திட்டத்தில் நடை பெற்று வரும் குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வும், நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு தேவையான லிட்டர் குடிநீரை 135 வழங்குவதற்கு விரைந்து வழிவகை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.