வேலூர், ஏப்.24 - உலகளவில் அதிக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட் டுள்ளது என்று விஐடி துணை வேந்தர் கோ.விஸ்வநாதன் கூறினார். தமிழியக்கம் சார்பில் திருவள்ளுவர் விழா நடைபெற்றது. மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு இடையே யான பேச்சு, கவிதை, கட்டுரை மற்றும் பாட்டுப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு விஐடி பல்கலைக் கழகத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு தலைமை தாங்கிய தமிழி யக்க நிறுவனர் மற்றும் தலைவருமான கோ. விசுவநாதன் பேசுகையில், உலக அளவில் சிந்து சமவெளி நாகரீகம் மிகவும் பழமையானது. அந்நாகரீக காலத்தில் பேசப்பட்டது நம் தமிழ் மொழிதான். அவ்வ ளவு பழமையானது தமிழ் மொழி. அதேபோல் உலகின் முதல் இலக்கண நூல் தமிழ் மொழிக்குதான் உண்டு. உலகளவில் 160க்கும் மேற்பட்ட நாடு களில் தமிழ் மொழி பேசப்படு கிறது. 100க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் குடியுரிமை பெற்றி ருக்கிறார்கள். தமிழியக்கம் எப்போதும் தமிழுக்கும், தமிழர்களுக்கும் உறு துணையாக இருக்கும். உலகின் பழமையான ஏழு மொழிகளில் தமிழும் ஒன்று, இதில் இன்றும் பழமை மாறாமல் பேசப்படும் ஒரே மொழியாக தமிழ் மொழி மட்டுமே உள்ளது. திருக்குறளுக்கு ஈடான ஒரு நூல் உலகில் வேறு எதுவும் கிடையாது. உலகின் அனைத்து நாடுகளுக்கும், மொழிகளுக்கும் பொது வான ஒரே நூல் திருக்குறள் தான். உலக அறிஞர்கள் வியந்து பாராட்டிய திருக் குறள், 100க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு தமிழில் தான் பெயர் சூட்ட வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் மொரீ சியசு முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன் பேசுகையில், மொரீசியசில் பள்ளிக் கல்வி முதல் பட்டப் படிப்பு வரை தமிழ் மொழி பாடமாக உள்ளது. வேறு எந்த நூலுக்கும் இல்லாத பெருமை திருக்குறளுக்கு மட்டும்தான் உண்டு என்றார். பேச்சு,கவிதை, கட்டுரை மற்றும் பாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூபாய் 10,000, இரண்டாம் பரிசாக ரூபாய் 7500, மூன்றாம் பரிசாக ரூபாய் 5000 வழங்கப்பட்டது. முன்ன தாக அனைவரையும் சுகு மார் வரவேற்றார். வணங்கா முடி, சிதம்பர பாரதி வாழ்த்துரை வழங்கினர். புலவர் பதுமனார் பாராட்டுரையும், கவியருவி அப்துல் காதர் ஊக்க உரை வழங்கினார். திருநாவுக்கரசு நன்றி கூறினார்.