districts

img

30 விழுக்காடு கூலி உயர்வு கேட்டு மனு

வேலூர். பிப். 9 - வேலூர் மாவட்டம், குடி யாத்தம் நகரை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 5,000 கைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பெருபாலானவை தனியார்  முதலாளிகளுக்கு சொந்த மானவை. இவற்றை நம்பி உப தொழிலில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள் ளனர். கடந்த முறை (8.6.2021)  கூலி உயர்வு பேச்சுவார்த்தை யின் போது ரூ.70 கூலி உயர்த்தி தருவதாக தனியார்  முதலாளிகள் தெரிவித்தனர். 8 கைலிகள் அதாவது 16 மீ.  நெய்தால்தான் கூலி உயர்வு  70 ரூபாய் சேர்த்து 1,500 ரூபாய் கூலி வழங்கப்படும். எனவே தற்போதைய விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு 30 விழுக்காடு கூலி உயர்வு வழங்க வேண்டும் என வேலூர் மாவட்ட கைத்தறி நெசவாளர் சங்கம் சார்பில் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக் கொண்ட கோட்டாட்சியர் தனியார் கைத்தறி முதலாளி களிடம் பேசிவிட்டு பேச்சு வார்த்தைக்கு தகவல் தெரி விப்பதாக கூறினார். மேலும்  குடியாத்தம் வட்டாட்சியர், தனியார் கைத்தறி முதலாளி கள் சங்கத்திற்கும் கடிதம் அளித்தனர். இதில் சங்கத்தின் கவுர வத்தலைவர் பாபு, மாவட்டத் தலைவர் வி.பி. சங்கர், மாவட்டச் செயலா ளர் என்.லெனின், சிஐடியு  நிர்வாகிகள் பி.காத்த வராயன், வி.குபேந்திரன் ஆகியோர் கலந்து கொண்ட னர்.