உறவினர்கள் மறியல் தருமபுரி, பிப்.4- பென்னாகரம் அருகே காவல் துறை யினர் மிரட்டி பணம் பறித்து வந்த நிலை யில், மன உளைச்சல் ஏற்பட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்ட நிலை யில், அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பிலியனூர் பகுதியைச் சேர்ந்த ரைஸ் மில் உரிமையாளர் முனி யப்பன் என்பவரின் மகன் புகழேந்தி (28). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் விடுதியில் தங்கியுள் ளார். விடுதியில் உள்ள அறையில் ரக சிய கேமராவில் இவர் தங்கியது குறித்த காட்சியை வைத்துக்கொண்டு, விடுதி யின் நிர்வாகிகள் புகழேந்தியை மிரட்டி பணம் பறித்து வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து புகழேந்தி பாப்பாரப் பட்டி காவல் நிலையத்தில் புகாரளித் துள்ளார். அப்புகாரை பெற்றுக் கொண்ட காவல் உதவி ஆய்வாளர், விடுதி நிர் வாகிகளிடமிருந்த காட்சிப்பதிவை பெற் றுக்கொண்டு, புகழேந்தியை மிரட்டி கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக பணம் பறித்து வந்ததாக கூறப்படு கிறது. புகழேந்தி தனது நண்பர் ஒருவ ரின் உதவியுடன், அடிக்கடி கடன் வாங்கி பணம் கொடுத்து வந்ததாகவும், வீட்டிலி ருந்த நகைகளை தனியார் நிறுவனத் தில் அடகு வைத்து பணம் கொடுக்கும் போது அவரது குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. குடும்பத்தினர் புகழேந்தியிடம் கேட்டபோது, தன்னை மிரட்டி பாப்பாரப்பட்டி காவல் நிலையத் தில் உள்ள காவல் உதவி ஆய்வாளர், தருமபுரி பகுதியில் உள்ள தனியார் தங் கும் விடுதியின் நிர்வாகிகள் அடிக்கடி பணம் பறித்து வந்ததாகவும், இதுவரை யில் சுமார் ரூ.12 லட்சம் வரை கொடுத் துள்ளதாக உறவினரிடம் தெரிவித்துள் ளார். இந்நிலையில், செவ்வாயன்று அதி காலை புகழேந்தி தனக்கு சொந்தமான ரைஸ் மில்லில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையறிந்து அப்பகுதியினர் அவரை மீட்டு அவசர சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோ தித்த மருத்துவர்கள், ஏற்கனவே புக ழேந்தி இறந்து விட்டதாக தெரிவித்துள் ளனர். இதனால் ஆவேசமடைந்த அவ ரது குடும்பத்தினர் மற்றும் உறவினர் கள், இளைஞரிடம் பணம் பறித்த காவல் உதவி ஆய்வாளர் மற்றும் தங்கும் விடுதி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து உடலை வாங்க மறுத்து, பென்னாகரம் அம்பேத் கர் சிலை முன்பு சாலை மறியலில் ஈடு பட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம் பவ இடத்திற்கு வந்த போலீசார் மறிய லில் ஈடுபட்ட பொதுமக்களிடம், முறையான புகார் அளிக்குமாறும், அத னடிப்படையில் விசாரணை மேற் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.